உங்கள் வங்கி… உங்கள் கையில்..! மொபைல் பேங்கிங் எளிய ஸ்டெப்ஸ்

SBI mobile banking : குறுஞ்செய்தி அல்லது கைபேசி வழி வங்கி சேவையை பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது எஸ்பிஐ வங்கி கணக்கை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

By: May 19, 2020, 9:40:30 PM

SBI mobile banking : இந்தியாவில் உள்ள மிகவும் நம்பதகுந்த வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி 1955 முதல் வணிகத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இது 2019 ஆம் ஆண்டுக்கான Fortune Globalன் உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலில் 236 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வங்கி சேவை தனது கிளைகள், ஆப் மற்றும் இணைய வழி வங்கி தளங்கள் மூலம் தனிநபர் மற்றும் பெரிய நிறுவனங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்கிறது.

பணம் செலுத்துவது மற்றும் பிற வங்கி செயல்பாடுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்ய எஸ்பிஐ யின் குறுஞ்செய்தி (SMS) மற்றும் கைபேசி வழி வங்கி சேவை (mobile banking) உங்களுக்கு உதவுகிறது. குறுஞ்செய்தி மற்றும் கைபேசி வழி வங்கி சேவையின் மற்றொரு பயன்பாடு என்னவென்றால் இதை 24 மணி நேரமும் 7 நாட்களும் அணுக முடியும். குறுஞ்செய்தி அல்லது கைபேசி வழி அல்லது இணைய வழி வங்கி சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகளில் நீண்ட வரிசையில் கால்கடுக்க நிற்பதை தவிர்க்க முடியும்.

குறுஞ்செய்தி அல்லது கைபேசி வழி வங்கி சேவையை பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது எஸ்பிஐ வங்கி கணக்கை எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

எஸ்பிஐ யின் குறுஞ்செய்தி வங்கி சேவையை எவ்வாறு செயல்படுத்துவது

STEP 1 அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று எஸ்பிஐ குறுஞ்செய்தி வங்கி சேவையை எவ்வாறு செயல்படுத்துவது.
கைபேசி வங்கி சேவைக்கான கோரிக்கை படிவத்தை நிரப்பி கொடுத்தால் உங்களது வங்கி கணக்குக்கான கைபேசி வழி வங்கி சேவை உடனடியாக செயல்படுத்தப்படும்.
STEP 2 அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று கைபேசி வழி வங்கி சேவையை எவ்வாறு செயல்படுத்துவது
அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்கு செல்லவும்.
உங்கள் டெபிட் அட்டையை ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்வைப் செய்து Mobile Registration option தேர்வு செய்யவும்.
அடுத்து Mobile Banking என்பதை தேர்வு செய்து Registration ஐ தட்டவும்.
இங்கு உங்களது கைபேசி எண்ணை உள்ளீடு செய்து Yes என்பதை தட்டி உறுதிப்படுத்தவும்.
அடுத்து உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசியில் ஒரு செயல்படுத்தும் குறுஞ்செய்தி வரும்.
STEP 3 எஸ்பிஐ இணையதளம் மூலம் குறுஞ்செய்தி வங்கி சேவையை எவ்வாறு செயல்படுத்துவது.
உங்கள் இணையவழி வங்கி (Net banking) கணக்கில் உள்ளே லாக் இன் செய்யவும்.
e-services என்பதை தட்டி State Bank Freedom என்பதை தேர்வு செய்யவும் (handset validation க்காக உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்).
இப்போது Registration என்பதை தேர்வு செய்யவும்.
குறுஞ்செய்தி வங்கி சேவையை எந்த வங்கி கணக்கில் செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
சம்ர்பி என்பதை தட்டி உறுதிப்படுத்தவும்.
STEP 4 கைபேசி வழி வங்கி சேவையை கைபேசி வழி எவ்வாறு செயல்படுத்துவது.
MBSREG என தட்டச்சு செய்து 567676 அல்லது 9223440000 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
எந்த கைபேசி எண்ணுக்கு கைபேசி வழி வங்கி சேவையை செயல்படுத்த வேண்டுமோ அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி அனுப்புவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இப்போது உங்களுக்கு ஒரு User ID மற்றும் MPIN (Mobile PIN) குறுஞ்செய்தி வாயிலாக வரும்.
இப்போது எஸ்பிஐ கைபேசி ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வந்த தகவல்களை வைத்து லாக் இன் செய்துக் கொள்ளவும்.
முதல் தடவை லாக் இன் செய்த பிறகு MPIN ஐ மாற்றிக் கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi state bank of india mobile banking money transaction digital payment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X