SBI News: இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு 9,000 க்கும் அதிகமான வங்கி கிளைகள் நாடெங்கிலும் உள்ளது. சேமிப்பு கணக்கு திறக்க வேண்டுமென்றால் இந்தியர்களின் விருப்பமான தேர்வு எஸ்பிஐ வங்கி தான். டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்த எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆன்லைன் சேவைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக சேமிப்பு கணக்கு திறக்கும் வசதியும் ஒன்று.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளான — onlinesbi.com மற்றும் sbi.co.in — இன் படி ஒரு நபர் சேமிப்பு கணக்கு திறக்க இந்த இணையதள முகவரியில் உள்நுழைய (logging) வேண்டும். எப்படி சேமிப்பு கணக்கை ஆன்லைன் மூலமாக திறக்க வேண்டும் என்பது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதள் முகவரிக்கு செல்லவும்.
2. "Apply Now” என்ற தேர்வை சொடுக்கவும்.
3. அடுத்து Savings Account தேர்வை சொடுக்கவும்.
4. எஸ்பிஐ’யின் ஆன்லைன் விண்ணப்பம் உங்கள் கணிப்பொறி திரையில் திறக்கும்
5. எஸ்பிஐ யின் ஆன்லைன் மூலமான உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக் கொள்ளுங்கள் (KYC) விண்ணப்பத்தை நிரப்ப பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை உள்ளீடு செய்து Submit" button ஐ சொடுக்கவும்.
6. உங்கள் ஆன்லைன் கணக்கு திறக்கும் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும் அருகில் உள்ள வங்கி கிளையில் இருந்து எப்போது அந்த வங்கி கிளைக்கு KYC ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற தகவல் வரும். குறிப்பிட்ட நேரத்தில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது சமர்பித்த KYC ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.
7. ஆவணங்களை நேரில் சமர்பித்த பிறகு வங்கி ஆவணங்களை சரிபார்க்கும்.
8. ஒப்புதல் ஆனவுடன், 3 முதல் 5 வேலை நாட்களில் உங்களுடைய ஆன்லைன் வங்கி கணக்கு செயல்படுத்தப்படும்.
வங்கி ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை எடுத்து செல்லவும்
அடையாளத்துக்கான சான்று : கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாளச் சீட்டு.
முகவரி சான்று : கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாளச் சீட்டு.
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN).
Form 16 (பான் அட்டை இல்லையென்றால்).
இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.