sbi state bank of india : எஸ்பிஐ வங்கியில் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு குறைந்தபட்சம் 2 முதல் 55 ரூபாய் வரை சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நடவடிக்கை வங்கிகளுக்கேற்ப மாறுபடும். கூகுள் பே, பேபால், பேடிஎம்களின் வருகைக்கு முன்பு வங்கி கணக்குகளில் இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும் என்றால் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் மூலம்தான் செய்யவேண்டும்.
நெஃப்ட் :
இந்த பண பரிமாற்றத்தை வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 முதல் 6.30 மணி வரை செய்யமுடியும். வங்கி நேரங்களுக்குப் பின் செய்ய முடியாது.
ஒருவர் வாரத்திற்கு 11 முறை நெஃப்ட் மூலம் பணம் அனுப்பலாம். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நெஃப்ட் மூலம் பணம் அனுப்ப முடியாது.
ஆர்டிஜிஎஸ் :
ஆர்டிஜிஎஸ் என்பதும் நெஃப்ட் போன்றுதான். இதில் பரிவர்த்தனை உடனடியாக நடைபெறும். 2 லட்சத்திற்கு அதிகமான பணப்பரிவர்த்தனைகளை இதில் செய்யமுடியும். இதை வாரநாட்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதிலும் 8 முதல் 4 மணி வரையில் மட்டுமே இந்த பரிவர்த்தனை மூலம் பணத்தை அனுப்ப முடியும்.
ஐஎம்பிஎஸ்:
மேற்குறிப்பிட்ட இரு முறைகளை விடவும் ஐஎம்பிஎஸ் சிறந்தது. அனைத்து நாட்களிலும், எப்போது வேண்டுமானலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். உடனடியாக பணப்பரிவர்த்தனை நடைபெறும். ஒருவர் அதிகபட்சமாக 2 லட்சம் வரை இதன் மூலம் பணத்தை அனுப்பலாம்.
இந்த சேவைகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்தால் பொதுவாக 2 ரூபாயிலிருந்து 55 ரூபாய் வரை சேவைக்கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
இந்த சேவைக்கட்டணங்கள் வங்கிகளை பொறுத்து வேறுபடும். தற்போது எஸ்பிஐ வங்கி இதற்கான சேவைக்கட்டணங்களை இரத்து செய்துள்ளது என்பது குறிப்படத்தக்கது. இனி எந்தவித சேவைக்கட்டணமும் இன்றி பயனர்கள் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக ஜூலை முதலாம் தேதி முதல் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக் கட்டணங்களை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் முதல் ஐஎம்பிஎஸ் சேவைக்கட்டணத்தையும் ரத்து செய்தது. இது யோனோ, இண்டெர்நெட், மொபைல் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.