Advertisment

எஸ்பிஐ-யில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சேவிங்க்ஸ் அக்கவுண்ட் இதுதான்!

டிஜிட்டல் சேமிப்பு கணக்கை கூட்டுக் கணக்காக மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்

author-image
WebDesk
New Update
sbi state bank of india sbi state bank online sbi

sbi state bank of india sbi state bank online sbi

sbi state bank of india sbi state bank online sbi : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க வழி வகை செய்துள்ளது. அதற்கு

Advertisment

எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com அல்லது sbi.co.in ஆகிய வலைத்தளங்களில் சென்று சுலபமாக வங்கிக் கணக்கைத் திறக்க முடியும். இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் நீங்கள் வங்கிக் கணக்கைத் திறக்கலாம்.

இந்தியக் குடிமகன்கள், இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் மட்டுமே எஸ்பிஐ டிஜிட்டல் கணக்கைத் திறக்க தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர் கண்டிப்பாக ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தனது பெயரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் எந்தவொரு எஸ்பிஐ கிளையையும் பார்வையிட்டு பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் வெற்றிகரமாக இ-கேஒய்சியை முடிக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கிற்காக வங்கியால் குறிப்பிடப்படக்கூடிய கேஒய்சி தேவைகள் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரே ஒரு எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு மட்டுமே இருக்க முடியும். அதாவது தகுதியான ஒவ்வொரு நபரும் ஒரு எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ டிஜிட்டல் கணக்கை எஸ்பிஐ சேமிப்புக் கணக்காக மாற்றலாம். எஸ்பிஐ அதன் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பெறலாம். எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை கூட்டுக் கணக்காக மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார். வாடிக்கையாளர் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை சாதாரண சேமிப்புக் கணக்காக மாற்றவும் அனுமதிக்கப்படுவார் என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment