sbi state bank of india state bank : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு கண்டிப்பாக சந்தோஷத்தை தரும். ஏற்கனவே எஸ்பிஐ-யின், மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டில் நீங்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
Advertisment
எஸ்பிஐ கணக்குகளில் SMS அலர்ட் மற்றும் குறைந்தபட்ச இருப்பு கட்டணங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடுங்கள் . இந்த தகவலை அதிகார்ப்பூர்வமாக எஸ்பிஐ தனது இணையதள பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது.
இனிமேல், SMS அலர்ட் மற்றும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருக்காததற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளரின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சேவை செய்திகளை ஆதரிப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை வங்கி இப்போது ரத்து செய்துள்ளது. இப்போது வாடிக்கையாளர் இதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
SBI இல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் முன்பு போலவே குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும், முன்னதாக, 3 ஆயிரம் ரூபாயை கணக்கில் வைக்காத எந்தவொரு வாடிக்கையாளருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது 50 சதவீதத்திற்கும் (ரூ. 1,500) கீழே விழுந்தால், அவர் ரூ .10 மற்றும் ஜிஎஸ்டியை கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. உங்கள் கணக்கில் நிலுவை 75 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் 15 ரூபாயையும் ஜிஎஸ்டியையும் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”