sbi state bank sbi stae bank of india sbi : ஓடிபி மூலம் பணம் எடுக்கும் வசதி தற்போது எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password - OTP) பயன்படுத்த வேண்டும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளை எடுக்க வேண்டும் என்றால் டெபிட் கார்டு பின் நம்பருடன் ஓடிபி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.இந்த சேவையை தற்போது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை உள்ளது.
இந்த முறையை இனி 24 மணி நேரமும் கொண்டு வருவதன் பாதுகாப்பு அளவை மேலும் பலப்படுத்தியுள்ளது எஸ்பிஐ.
ஓடிபி அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி செயல்படும் முறை: வாடிக்கையாளர்கள் பின் நம்பரையும் விரும்பும் தொகையையும் தேர்வு செய்தவுடன் ஓடிபி நம்பரை பதிவு செய்வதறகான வசதியை திரையில் பார்க்கலாம். அதே நேரம் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை அழுத்திய பிறகே பணம் கிடைக்கும்.
இருப்பினும், இந்த வசதி தற்போது எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.