வெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ… லோன் தொகை ரூ10 லட்சம்!

ரூ .50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாயும், தருண் முத்ரா கடனில் பத்து லட்சம் ரூபாயும் பெறலாம்.

sbi state state bank of india sbi account loan
sbi state state bank of india sbi account loan

sbi state state bank of india sbi account loan : நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெறும் 59 நிமிடங்களில் கடன் வழங்குகிறது.

எஸ்பிஐ (SBI) வழங்கும் முத்ரா கடன் பெற, வாடிக்கையாளர்கள் https://www.sbiloansin59minutes.com என்ற வலை தளத்திற்கு சென்று தேவையான தகவல்களை உள்ளீடு செய்தால், 59 நிமிடங்களில் கடனை பெறலாம்.

முத்ரா கடனை பெற, ஒருவர் வங்கி கணக்கில் ஸ்டேட்மெண்ட், புகைப்படம், அடையாள அட்டை, வசிப்பிடம் தொடர்பான ஆதாரம், விற்பனை ஆவணங்கள், சேல்ஸ் கொடேஷன்கள், வணிக ஐடி (business ID), ஜிஎஸ்டி (GST) அடையாள எண், வருமான வரி தாக்கல் செய்த விபரம் ஆகியவற்றை வழங்க வேண்டும்

எஸ்பிஐ வங்கியிடம் முத்ரா கடன் பெறுவதில் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், அவர்கள் தொலைபேசி எண் 022-22740510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் பிரச்சனையை gm.micofinance@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முத்ரா கடன்களில் மூன்று வகைகள் உள்ளன ஷிஷு முத்ரா கடன், கிஷோர் முத்ரா கடன் மற்றும் தருண் முத்ரா கடன். ஷிஷு முத்ரா கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையும், கிஷோர் முத்ரா கடனில் ரூ .50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாயும், தருண் முத்ரா கடனில் பத்து லட்சம் ரூபாயும் பெறலாம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழங்கும் இந்த கடனுக்கு, கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை அல்லது ஒப்புதல் கிடைக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்கள் வீட்டில் ஆன் லைன் மூலம் மூலம் பத்தாயிரம் முதல் ஒரு 10 லட்சம் வரையிலான கடன்களை மிக எளிதாக பெறலாம். இந்த கடனை பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் எஸ்பிஐ (SBI) வழங்குகிறது. கார்ப்பரேட் அல்லாத சிறு / குறு நிறுவனங்களுக்கு ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கும் இந்த திட்டத்தை பிரதமர் 2015 ஏப்ரல் 8ம் தேதி அன்று அறிமுகப்படுத்தினார்.

.“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi state state bank of india sbi account loan sbi loan state bank loan sbi netbanking

Next Story
கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: அதிர்ச்சி தந்த காய்கறிகள் விலை!koyambedu tamil koyambedu market
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com