சம்பளம் மாதிரி மாதம்தோறும் வருவாய்..! எஸ்பிஐ- ன் இந்தத் திட்டத்தில் சேர்ந்தீர்களா?

State Bank of India’s Annuity Scheme: நீங்கள் உங்கள் வருவாய்யை அதிகரிக்க முதலீடு செய்ய விரும்பினால், எஸ்பிஐ வங்கியின் நிலையான வருவாய் தரும் திட்டத்தில் முதலீடு செய்யலாம்

SBI tamil news earn monthly income through State Bank of India's Annuity Scheme

SBI Bank tamil news: தற்போதைய காலங்களில், ஒவ்வொரு நபரும் தங்களது மாத வருமானத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். இதற்காக, சிலர் தங்களது வேலைகளை மாற்றுவததோடு, முதலீடு செய்ய விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் வருவாய்யை அதிகரிக்க முதலீடு செய்ய விரும்பினால், எஸ்பிஐ வங்கியின் நிலையான வருவாய் தரும் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மற்றும் எஸ்பிஐ வங்கியின் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பாதிக்கலாம்.

முதலீடு செய்வோர், சில சமயங்களில் தவறான மற்றும் பாதுகாப்பு இல்லாத திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். எனவே நீங்கள் முதலீடு செய்யும் முன் சரியான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யவும்.

எஸ்பிஐயின் வருடாந்திர திட்டம்

எஸ்பிஐயின் வருடாந்திர திட்டதில் 36, 60, 84 அல்லது 120 மாத கால வரையறைக்குள் உங்கள் முதலீடுகளை செய்யலாம். இதில், நீங்கள் முதலீடு செய்ய தேர்வு செய்த கால வரையறைக்கான வைப்பு தொகையின் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். உதாரணத்திற்குநீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கான வைப்பு நிதி முதலீடு செய்தால், அந்த கால அளவிற்கான வட்டி விகித்தையே நீங்கள் பெறுவீர்கள்.

எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்திற்கான தகுதி

இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு குடிமகனும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். மற்றும் இந்த திட்டத்தில் தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ இணையலாம்.

குறைந்தபட்ச வைப்பு நிதி

எஸ்பிஐயின் வருடாந்திர வைப்புத் நிதி திட்டத்திற்கான தொகை மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ .1,000 செலுத்தி, இந்தத்திட்டத்தை துவங்கலாம். அதிகபட்ச தொகை செலுத்த வரம்பு இல்லை. மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டியை பெற தொடங்கலாம்.

மாத வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்

இந்த திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ .10,000 வருமானத்தை பெற நீங்கள் விரும்பினால், ரூ .5,07,965 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில், நீங்கள் 7 சதவீத வட்டி விகிதத்திலிருந்து வருமானத்தைப் பெறுவீர்கள். இது முதலீட்டாளருக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 ரூபாய் வரை கிடைக்க வழி செய்யும்

வருடாந்திர திட்டம் மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி)

நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் மக்கள் வருடாந்திர திட்டத்தின் கீழ் மொத்த தொகை செலுத்துவதற்கு சிரமம் இருக்கும். எனவே அவர்கள் தொடர்ச்சியான வைப்புத்தொகையில் (ஆர்.டி) முதலீடு செய்யலாம். ஆர்.டி -யில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சேமிக்கப்பட்டு, வட்டி பெற விண்ணப்பித்த பிறகு உங்களுடைய வட்டி தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதனாலேயே வருடாந்திர திட்டத்தை விட தொடர்ச்சியான வைப்புத்தொகை ஆர்.டி பெரும்பாலனோரால் விரும்பப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi tamil news earn monthly income through state bank of indias annuity scheme

Next Story
ரூ .50 லட்சம் வரை கடனைப் பெறலாம்… ஆவணங்கள் தேவையில்லை… எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express