SBI News: பேங்க்ல இன்னும் வரிசையில் போய் நிற்கும் நபரா? இதை ஏன் நீங்க கவனிக்கவில்லை?

SBI Net banking: ATM டெபிட் கார்டு விவரம் மற்றும் captcha code போன்றவற்றையும் நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

SBI netbanking registration

SBI tamil news, SBI netbanking registration: கொரோனா பெருந்தொற்று காலங்களில், பொது மக்கள்  தங்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய சூழலில்,  எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள், வங்கிக்கு செல்லாமல் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கவும், மற்ற பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவும் நெட் பேங்கிங் வசதி இன்றியமையாகிறது.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதியை நேரடியாக வங்கிக்கு செல்லாமல், எஸ்பிஐ ஆன்லைன் தளம் மூலமே ரெஜிஸ்டர் செய்து கொள்ள முடியும்

SBI netbanking registration: ரெஜிஸ்டர் செய்ய தேவைப்படும் முக்கிய அம்சங்கள்:  

நமது மொபைல் எண் எஸ்.பி.எம் வங்கிகளில் பதிவு செய்யப்பட வேண்டும்

ஏடிஎம் அட்டை இருக்க வேண்டும்

முன்னதாக, எஸ்.பி.ஐ வங்கி கிளையில் ஆஃப்லைன் மூலம் வாடிக்கையாளர் நெட் பேங்கிங் வசதிக்கு விண்ணப்பித்திருக்கக்கூடாது;

கூட்டு சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதியை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது.

ஆன்லைனில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது? :

எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வலைத்தளமான onlinesbi.com – இல் நுழைந்து ‘New User Registration’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

 

 

வங்கி அக்கவுன்ட் நம்பர், CIF எண், வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், வங்கி கிளை எண் ஆகியவற்றை கொடுத்துவிட்டு ‘Submit’ செய்யவும்.

 

பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பபப்டும்.

பிறகு, OTP எண்ணை உள்ளிட்ட பிறகு, கன்ஃபார்ம் பட்டனை அழுத்தவும்.

தொடர்ந்து, ‘‘I have my ATM card (Online registration without branch visit)’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சப்மிட் செய்யவும்.

ATM டெபிட் கார்டு விவரம் மற்றும் captcha code போன்றவற்றையும் நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

இதன் பிறகு, பயனாளர்களுக்கு தற்காலிக யூசர் நேம்  அனுப்பி வைக்கப்படும். பிறகு, நாம் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


பிறகு, தற்காலிக யூசர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து புதிய யூசர் நேம் உருவாக்கிக் கொள்ளலாம். இந்த யூசர் நேம் நமது நிரந்தர யூசர் நேமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இறுதியாக, நீங்கள் login password மற்றும் profile password என தனித்தனியே உருவாக்கி, ரகசிய கேள்வியை தேர்வு செய்து அதற்கு பதிலும் கொடுக்க வேண்டும். நீங்கள் Username அல்லது Password மறந்து போனால், இது உங்களுக்கு கைக்கொடுக்கும்.

பிறகு, பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த நாடு ஆகியவற்றை பதிவு செய்து submit கொடுக்கவும்.

இதனையடுத்து, எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் வசதி  உங்களுக்கு கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi tamil news sbi netbanking sbi netbanking registration

Next Story
கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்!indian bank indianbank netbanking indian bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express