SBI Tamil News: எஸ்,பி.ஐ வாடிக்கையாளர்கள் தவறவே கூடாத அப்டேட் இது! கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் எஸ்.பி.ஐ வங்கியின் இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள். அது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக எஸ்.பி.ஐ வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய பொதுத்துறை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினமும் பல்லாயிரம் கோடிகள் தினம்தோறும் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கி இது. தற்போது பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், அத்தனை வாடிக்கையாளர்களும் ஸ்டேட் வங்கியின் இணையதளத்தை பயன்படுத்தி ‘நெட்பேங்கிங்’ மூலமாக பணப் பரிமாற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
State Bank of India (SBI) Fake Website: எஸ்.பி.ஐ இணையதளம் மோசடி
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட மோசடிப் பேர்வழிகள் எஸ்.பி.ஐ வங்கியின் பெயரிலேயே மோசடியாக போலி இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக எஸ்.பி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மோசடிப் பேர்வழிகள் சைபர் குற்றங்களை மேற்கொள்ள புதிய வழிகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டால், epg.cms@sbi.co.in என்கிற முகவரிக்கு புகாரை மெயில் செய்யுங்கள். அல்லது, report.phishing@sbi.co.in என்கிற முகவரிக்கு புகார் செய்யலாம்.
குறிப்பாக, www.onlinesbi.digital என்கிற இணையப் பக்கம் போலியானது என கூறியிருக்கிறது எஸ்.பி.ஐ. எஸ்.பி.ஐ வங்கியின் இணைய முகவரி போலவே இருக்கும் இதுபோன்ற இணையதளங்களிடம் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவுறுத்தியிருக்கிறது. இது போன்ற போலிகளிடம் இருந்து ஏதாவது எஸ்.எம்.எஸ். வந்தால் அவற்றை ‘டெலிட்’ செய்துவிடவும். அதை க்ளிக் செய்வதையோ, உங்கள் ஆன்லைன் பரிமாற்ற பாஸ்வேர்ட்களை பகிர்வதையோ தவிர்த்து விடுங்கள். இது தொடர்பாக தேவைப்பட்டால், சைபர் கிரைம் போலீஸிலும் புகார் செய்யலாம். மேற்கண்டவாறு எஸ்.பி.ஐ கூறியிருக்கிறது.
கொரோனா நிவாரணமாக எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் அறிவித்திருக்கும் தவணை தள்ளிவைப்பு சலுகையை பெறும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, ஓடிபி அனுப்பி நடைபெறும் மோசடி குறித்து எஸ்.பி.ஐ சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை செய்திருந்தது. அதற்குள் இணையதளத்தையே போலியாக உருவாக்கி ஏமாற்றத் துடிக்கும் மோசடியாளர்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது எஸ்.பி.ஐ.
Fraudsters are using new ways & techniques to commit cybercrimes. Here’s a new way people are scammed in India. If you come across any such instances, please inform us through e-mail to: epg.cms@sbi.co.in & report.phishing@sbi.co.in & also report on: https://t.co/L3ihBoE1kS#SBI pic.twitter.com/O7gXx7QhlQ
— State Bank of India (@TheOfficialSBI) April 11, 2020
உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க சுற்றும் மோசடிப் பேர்வழிகள் குறித்து எஸ்.பி.ஐ. எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. இனி உஷாராக இருக்க வேண்டியவர்கள் நீங்கள்தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.