மினிமம் பாலன்ஸ் தேவையில்லை: SBI-யின் 6 அதிரடி அறிவிப்புகள்

State Bank Of India: எஸ்பிஐ 3 சதவிகித வட்டியை தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் வழங்குகிறது.

SBI Tamil News: ஒரு மாத காலத்திற்குள் நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கடன் வட்டி விகிதங்கள் குறைப்பு, சேமிப்பு கணக்கில் குறைநதபட்ச மாதாந்திர சராசரி இருப்பு தொகையை பராமரிக்காவிட்டால் அதற்கு அபராதம் விதிப்பதை கைவிடுவது, எஸ் எம் எஸ் கட்டணங்களை நீக்குவது போன்ற அறிவிப்புகளை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள முக்கியமான 6 அறிவிப்புகளை பற்றி இங்கு பார்ப்போம்.


நிரந்தர வைப்பு தொகை விகிதங்கள் (Fixed Deposit rates )

எஸ்பிஐ தனது நிரந்தர வைப்பு தொகைக்கான விகிதத்தை சில tenors களுக்கு குறைப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. எஸ்பிஐ யின் சில்லரை கால வைப்பு (retail term deposits) களுக்கு ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. சில tenors களுக்கு 10 முதல் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் விகிதங்கள் (SBI Home, Car Personal Loan Rates):

Marginal cost of funds-based lending rates (MCLR) குறைப்பதாக எஸ்பிஐ மேலும் அறிவித்துள்ளது. கடன் விகிதங்கள் 10- 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. பொது துறை வங்கியான எஸ்பிஐ நடப்பு நிதி ஆண்டில் செய்துள்ள பத்தாவது குறைப்பு இது. எஸ்பிஐ யின்படி, புதிய விகிதங்கள் மார்ச் 10 முதல் செயல்பாட்டுக்கு வரும். திருத்தத்தின்படி முன்பு 7.85 சதவிகிதமாக இருந்த MCLR தற்போது 7.75 சதவிகிதமாக வந்துள்ளது.

பாதுகாப்பு பெட்டகத்துக்கான வாடகை கட்டணம் (Safe-deposit rental charges)

இந்தவருடம் மார்ச் 31 முதல் பாதுகாப்பு பெட்டகங்களுக்கு அதிக வாடகை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகரிக்கப்பட்ட கட்டணம் நகரங்களுக்கு நகரம் பாதுகாப்பு பெட்டகத்தின் அளவை பொருத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக ஒரு மெட்ரோ நகரத்தில் உள்ள சிறிய பெட்டகத்துக்கான கட்டணம் முன்பு ரூபாய் 1,500/- ஆக இருந்தது ரூபாய் 2,000/- ஆக அதிகரித்திருந்தது. மேலும் இந்த விலை அதிகரிப்பு என்பது ஒரே சீராக 33 சதவிகிதம் என அனைத்து வங்கி கிளைகளிலும் இருந்தது.

சராசரி மாத இருப்பு பராமரிப்பு தள்ளுபடி (Average Monthly Balance -AMB) maintenance waiver

சராசரி மாத இருப்பு பராமரிப்பு தொகையை தள்ளுபடி செய்வதாக இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. மேலும் இது அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது.

எஸ்பிஐ குறுஞ்செய்தி கட்டணம் (SBI SMS charges)

முதலில் வாடிக்கையாளர் (‘Customers First’) என்ற அணுகுமுறையின் ஒரு பகுதியாக வங்கி குறுஞ்செய்திக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு விகிதங்கள் (SBI Savings Account Rates)

எஸ்பிஐ வாடிக்கையாளர்களை வங்கியியலை நேக்கி திருப்புவதற்காகவும் அவர்களுக்கு வங்கி மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும் எஸ்பிஐ 3 சதவிகித வட்டியை தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close