SBI News In Tamil: சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் கடன் அளிப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. உங்களுக்கு இப்போது கடன் தேவை என்றால் எஸ்பிஐ-யில் சிறப்பு ஒதுக்கீடு காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொரோனா அவசர கால கடன் திட்டமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உண்டு. வாடிக்கையாளர்களுக்கு கடன் வேண்டுமென்றால் மக்கள் நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
State Bank Of India Corona Loan: கொரோனா எஸ்.பி.ஐ கடன்
யாரெல்லாம் கடன் பெறலாம்?
* கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் கடன் வாங்க முடியும்.
* நீங்கள் விண்ணப்பித்தால் 1 மணி நேரத்தில் கடன் பெற முடியும்.
* கடன் பெற்றுவிட்டால் அடுத்த 6 மாதத்திற்கு பின்பு வட்டி கட்ட தொடங்கலாம்.
* ஜூன் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
* வாடிக்கையாளர்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி இருந்தால் கூட இச்சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும்.
* தற்போது வரை எஸ்பிஐ வங்கியில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.