SBI Tamil News: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கான (savings deposit account) வட்டியை 15 ஏப்ரல் 2020 முதல் குறைத்துள்ளது. எனவே ஏப்ரல் 15 முதல் உங்களது எஸ்பிஐ சேமிப்பு வைப்பு கணக்கு குறைந்த வருமானத்தையே ஈட்டும்.
Advertisment
எஸ்பிஐ சேமிப்பு வைப்பு 25 basis points (bps) 2.75 சதவிகித குறைவான வருமானத்தையே ஈட்டும் என வங்கியில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. இது வரை வங்கி 3 சதவிகித வட்டி விகிதத்தை சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கு வழங்கி வந்தது. அமைப்பில் போதிய பணபுழக்கத்தை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ தனது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு வட்டி விகிதத்தை 15 ஏப்ரல் முதல் மாற்றி அமைத்துள்ளது.
State Bank Of India (SBI) Savings Account Interest Rate: ஏப்ரல் 15 முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்
SB வைப்பு கணக்கில் (deposit accounts) ஒரு லட்சம் வரையிலான இருப்பு (balances) - 2.75% p.a. SB வைப்பு கணக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இருப்பு - 2.75% p.a. அனைத்து tenors க்கும், வங்கி marginal cost of funds based lending rate (MCLR) ஐயும் 35 bps என்ற அளவில் குறைத்துள்ளது.
சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு ஒரு வருட MCLR ஏப்ரல் 10, 2020 முதல், 7.75 சதவிகிதம் என்பதிலிருந்து வருடத்துக்கு 7.40 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது. எஸ்பிஐ வங்கி தனது சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை 3 சதவிகிதமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் 11 2020 முதல் குறைத்துள்ளது.
முன்பு ஒரு லட்சம் வரையிலான வைப்புகளுக்கு எஸ்பிஐ 3.25 சதவிகிதமும், ஒரு லட்சத்துக்கு அதிகமான வைப்புகளுக்கு 3 சதவிகிதமும் வழங்கி வந்தது. ஒட்டு மொத்தமாக 44.51 கோடி சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களும் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பை (average monthly balance- AMB) பராமரிக்கவேண்டும் என்பதையும் கடந்த மாதம் முதல் எஸ்பிஐ தள்ளுபடி செய்தது. மேலும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ தள்ளுபடி செய்துவிட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"