SBI செம்ம ஸ்கீம், மிஸ் பண்ணாதீங்க... சேமிப்புக் கணக்கில் ஃபிக்சட் டெப்பாசிட்
SBI Tamil News: சேமிப்பு பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி வசதி, கைபேசி வங்கி வசதி, ஏடிஎம் அட்டை மற்றும் குறுஞ்செய்தி அலேர்ட் ஆகிய வசதிகளைப் பெறுவார்கள்.
SBI Tamil News: சேமிப்பு பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி வசதி, கைபேசி வங்கி வசதி, ஏடிஎம் அட்டை மற்றும் குறுஞ்செய்தி அலேர்ட் ஆகிய வசதிகளைப் பெறுவார்கள்.
SBI Savings Plus interest rate, SBI Fixed deposit, state bank of india, state bank of india fd interest rate, எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி
SBI Savings Plus Account: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சேமிப்பு கணக்கு திறக்க தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்பிஐ சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கை வழங்குகிறது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் உபரி பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாறிவிடும், மேலும் எஸ்பிஐ நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், வைப்புக்கு கிடைக்கும். எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான onlinesbi.com மற்றும் sbi.co.in ஆகியவற்றில் கிடைக்கும்.
Advertisment
எஸ்பிஐ’யின் மல்டி ஆப்ஷன் வைப்பு திட்டத்தின் கீழ் உள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒருவருடைய வைப்பு குறிப்பிட்ட வரம்புக்கு மேலே தானாக நிரந்தர வைப்பாக மாறிவிடும். மேலும் இந்த மல்டி ஆப்ஷன் வைப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் கடனும் வாங்கிக்கொள்ளலாம்.
எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக எஸ்பிஐ நிரந்தர வைப்பாக (எப்டி) மாறிவிடும். இதற்கு எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 35,000/- ஆக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும். அதிலிருந்து கூடுதல் ரூபாய் 1,000/- எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும்.
Advertisment
Advertisements
எடுத்துக்காட்டாக உங்கள் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் வங்கி கணக்கில் ரூபாய் 35,000/- இருக்கிறதென்றால், ரூபாய் 10,000/- தானாக எப்டி ஆக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் ரூபாய் 1,500/- ஐ உங்கள் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் செலுத்தினால், ரூபாய் 1,000/- எஸ்பிஐ எப்டி’யில் சேர்ந்துவிடும். மீதம் உள்ள ரூபாய் 500/- உங்கள் சேமிப்பு கணக்கிலேயே இருக்கும்.
எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- த்துக்கும் கீழே இருப்பு வைத்திருந்தாலும் வாடிக்கையாளர்களிடன் அபராதம் வசூலிக்கப்படாது. எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) தேவையில்லை. எஸ்பிஐ சேமிப்பு கணக்கை போல, எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கிற்கும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி வசதி, கைபேசி வங்கி வசதி, ஏடிஎம் அட்டை மற்றும் குறுஞ்செய்தி அலேர்ட் ஆகிய வசதிகளைப் பெறுவார்கள்.
எனவே நீங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு வைப்பு மூலம் அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு ஒரு நல்ல தேர்வு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"