கட்டணமே இல்லாமல் நகைக் கடனா? யெஸ்… எஸ்பிஐ-யில் இதை மட்டும் செய்யுங்க!

SBI Gold loan tamil news: எஸ்பிஐ வங்கி 7.5% என்ற வட்டி விகிதத்தில் தங்கக் கடனை வழங்குகிறது; யோனா செயலி மூலம் விண்ணபபிதால் செயலாக்க கட்டணம் இல்லை.

SBI Tamil News: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிலையான வருமான ஆதாரத்தைக் கொண்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபருக்கும் தங்கக் கடன் வசதிகளை வழங்குகிறது. வங்கிகளால் விற்கப்படும் தங்க நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை அடகு வைப்பதன் மூலம் இந்த வகை கடனைப் பெற முடியும். வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கக் கடன் பெற வருமானத்திற்கான எந்த ஆதாரத்தையும் வங்கியில் சமர்ப்பிக்க தேவையில்லை.

SBI gold loan: தகுதி வரம்பு

இந்த திட்டத்திற்கு தகுதி பெற, கடன் வாங்குபவர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வங்கியின் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிலையான வருமானம் எந்தவொரு தனிநபரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

எஸ்பிஐ தங்கக் கடனின் அம்சங்கள்

எஸ்பிஐ தங்கக் கடனில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ .50 லட்சம் வரையிலும், குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ .20,000 வரையிலும் பெறலாம்.

SBI yono gold loan: குறைந்த செயலாக்க கட்டணம்

கடன் வாங்குபவரின் செலவை குறைக்கும் விதமாக, எஸ்பிஐ குறைந்த செயலாக்க கட்டணத்தை வசூலிக்கிறது. இது கடன் தொகையில் 0.25%, ஜிஎஸ்டி (குறைந்தபட்சம் ரூ .250). மற்றும் எஸ்பிஐ-யின் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது

எஸ்பிஐ-யில் பாதுகாப்பாக வழங்கப்பட்ட தங்கப் பொருட்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் திருப்பித் தரப்படுகின்றன.

விளிம்பு

தங்கக் கடன்: 25%

திரவ (லிக்யூடு) தங்க கடன்: 25%

புல்லட் திருப்பிச் செலுத்தும் தங்கக் கடன்: 35%

திருப்பிச் செலுத்தும் முறை

தங்கக் கடன்: அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துதல், கடன் வாங்கிய அடுத்த மாதத்திலிருந்து தொடங்கப்படும்.

திரவ (லிக்யூடு) தங்கக் கடன்: பரிவர்த்தனை வசதி மற்றும் மாத வட்டியுடன் கூடிய ஓவர் டிராஃப்ட் கணக்கு வழங்கப்பட்டது முதல் கடனை திருப்பி செலுத்திலாம்,

புல்லட் திருப்பிச் செலுத்தும் தங்கக் கடன்: கடனின் காலத்திற்கு அல்லது அதற்கு முன் / கணக்கை மூடுவதில் இருந்து துவங்கப்படும்.

திருப்பிச் செலுத்தும் காலம்

தங்கக் கடன்: 36 மாதங்கள்

திரவ (லிக்யூடு) தங்கக் கடன்: 36 மாதங்கள்

புல்லட் திருப்பிச் செலுத்தும் தங்கக் கடன்: 12 மாதங்கள்

கடன் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்

தங்கக் கடன் விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படங்கள் தேவைப்படும். முகவரி ஆதாரத்துடன் கூடிய அடையாள சான்று ஒன்று. கடன் வாங்குபவர் கல்வியறிவற்ற இல்லாதவராக இருந்தால் ஒரு சாட்சி கடிதம் வேண்டும். கடன் வழங்கல் நேரம். கோரிக்கை உறுதிமொழி குறிப்பு மற்றும் கோரிக்கை உறுதிமொழி குறிப்பு விநியோக கடிதம் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்க ஆபரணங்கள் வாங்கிய கடிதம். மற்றும் ஏற்பாடு கடிதம் ஒன்று தயார் செய்து கொள்ள வேண்டும்.

SBI Gold Loan Interest: எஸ்பிஐ தங்க கடன் வட்டி விகிதம்

எஸ்பிஐ – யில் தங்க கடன் (அனைத்து வகைகளும்) 7.50% வழங்கப்படுகிறது. மற்றும் ரியால்டி தங்கக் கடன், எஸ்பிஐ வீட்டுவசதி கடன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக (அனைத்து வகைகளும்): 7.3% வழங்ப்படுகிறது

எஸ்பிஐ தங்க கடனுக்கான எஸ்எம்எஸ் மற்றும் வசதி மிஸ் கால்,

எஸ்பிஐ தங்கக் கடன் பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, நீங்கள் 72089 33143 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது 72089 33145 என்ற எண்ணிற்கு SMS GOLD என்று தட்டச்சு செய்து ஒரு மெசேஜ் அனுப்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Sbi tamil news state bank of india sbi yono gold loan sbi yono

Next Story
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு: 20 வங்கிகளில் எது பெஸ்ட்? முழு பட்டியல்Business news in tamil  list of lowest home loan interest banks
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com