Senior Citizen Fixed Deposit Interest Rates 2023: பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களின் வருமானத்தின் ஏற்ற இறக்கம் மற்றும் நிச்சயமற்ற தன்மை பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், வங்கிகள் வழங்கும் நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன.
200 முதல் 800 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பணவீக்கத்தை முறியடிக்கும் வட்டி விகிதங்களை தற்போது பல்வேறு வங்கிகள் வழங்குகின்றன.
அந்த வகையில், 7.5% வட்டியில் 10 வருட FD-களை முன்பதிவு செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் முதிர்வு காலத்தில் தங்கள் ஆரம்ப முதலீட்டை இரட்டிப்புக்கு மேல் பெற முடியும்.
இந்த நிலையில், போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா, தற்போது 7.2% வட்டியை வழங்குகிறது. இந்த விகிதத்தில், கிஷான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
பாரத ஸ்டேட் வங்கி நிலையான வைப்பு
10 வருட கால டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ 7.5% வட்டி வழங்குகிறது. எஸ்பிஐயில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.10 லட்சம் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 10 வருட கால டெபாசிட்டுகளுக்கு 7.3% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது. பிஎன்பியில் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.14 லட்சம் அளிக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
பேங்க் ஆஃப் பரோடா
10 வருட கால டெபாசிட்டுகளுக்கு, பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது. BoB-ல் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.1 லட்சத்தை அளிக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
எச்.டி.எஃப்.சி. வங்கி
10 வருட கால டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியை HDFC வங்கி வழங்குகிறது.
எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.15 லட்சம் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்பு
10 வருட கால டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகையாக இருந்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.1 லட்சம் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்பு
10 வருட கால டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு ஆக்சிஸ் வங்கி 7.75% வட்டி வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு ரூ.2.15 லட்சம் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு இந்த விகிதம் பொருந்தும்.
கிஷான் விகாஸ் பத்திரம்
நீங்கள் KVP இல் ரூ. 1,00,000 முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2,00,000 கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/