/tamil-ie/media/media_files/uploads/2023/04/sbi-bank.jpg)
SBI
எஸ்.பி.ஐ வங்கி குடும்பங்களுக்கான சேமிப்பு கணக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளின் வளர்ச்சி குறைவாக உள்ளது. வங்கியின் கடன் வாங்கும் வளர்ச்சி, பணத்தை சேமிக்கும் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில் பழைய சேமிப்பு கணக்குகளில், புதிய வேறுபாடுகளை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகப்படுத்துகிறது.
2022ம் ஆண்டு பொறுத்தவரை எல்லா வருடமும், வங்கியின் வைப்பு நிதி 8.86 % ஆக இருந்தது. இந்நிலையில் கடன் வாங்கும் தொகை 16.91 %-மாக இருந்தது.
இந்நிலையில் 2024 ஆண்டில், வங்கியின் வைப்பு நிதி 12% ஆக உயரும் என்றும் மேலும் கடன் தொகை 16% குறையும் என்றும் எஸ்.பி.ஐ வங்கி எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தும் பரிவார்( குடும்ப) சேமிப்பு கணக்கில், இன்சூரன்ஸ், மருத்துவ செலவு, வங்கி லாக்கர் வசதியில் சலுகை ஆகியவற்றை வங்கி வழங்குகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மூலம், எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, வங்கி கணக்கை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.