நடப்பு நிதியாண்டில் இந்திய மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கடன்கள் மூலம் ரூ.50,000 கோடி வரை திரட்டப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முடிவை வங்கியின் மத்திய வாரியம் எடுத்தது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், “நீண்ட காலப் பத்திரங்கள், பேசல் III ஓரடுக்கு பத்திரங்கள், பேசல் III 2 அடுக்கு பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பு அல்லது வேறு ஏதேனும் மாற்றத்தக்க நாணயத்தில் நிதி திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐயின் மார்ச் காலாண்டின் நிகர லாபம் கிட்டத்தட்ட 90 சதவீதம் அதிகரித்து, ஒருங்கிணைந்த அளவில் ரூ.18,094 கோடியாக இருந்தது.
தொடர்ந்து, அதன் நிகர லாபம் 83 சதவீதம் உயர்ந்து ரூ.16,695 கோடியாகவும், நிதியாண்டில் 58 சதவீதம் அதிகரித்து ரூ.50,232 கோடியாகவும் இருந்தது. காலாண்டு மற்றும் நிதியாண்டு இரண்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக லாபம் ஈட்டியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“