ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. “எஸ்பிஐ பென்ஷன் சேவா” வலைதளம் புதுப்பிப்பு… புதிய வசதிகள் என்ன?

SBI Pension Seva: பென்ஷன் தொடர்பான பணிகளை எளிமையாக்க எஸ்பிஐ வங்கி தனது பென்சன் சேவா இணையதளத்தை மேம்படுத்தியுள்ளது.

sbi pension seva

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு சேவைகளை தற்போது ஆன்லைன் மூலமே எளிதாக்கியுள்ளது. அந்த வகையில் எஸ்பிஐ தனது சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களுக்கு புதிய பென்சன் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது வங்கியின் https://www.ptensionseva.sbi என்ற இணையதள சேவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான சேவைகள் எளிதாக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள SBI வங்கி, ‘SBI வங்கியின் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி. இனி உங்கள் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் நீங்கள் எளிதாக நிர்வகிக்க எங்கள் ஓய்வூதிய சேவை வலைதளத்தை நாங்கள் புதுப்பித்துள்ளோம்’ என்று பதிவு செய்துள்ளது. இப்போது SBI வங்கியில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய சேவைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இணையதளத்தில் கிடைக்கும் சேவைகள்:

ஓய்வூதிய சீட்டு அல்லது படிவம் 16 பதிவிறக்கம்

ஓய்வூதிய பரிவர்த்தனை விவரங்கள்

நிலுவை கணக்கீட்டு தாள் பதிவிறக்கம்

முதலீடு தொடர்பான விவரங்கள்

வாழ்க்கை சான்றிதழ் நிலை

ஓய்வூதிய விவரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

ஓய்வூதியதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட நன்மைகள்:

ஓய்வூதிய கட்டண விவரங்களுடன் மொபைல் தொலைபேசியில் எஸ்எம்எஸ் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

மின்னஞ்சல் அல்லது ஓய்வூதியம் செலுத்தும் கிளை மூலம் ஓய்வூதிய சீட்டு வழங்குதல்.

ஓய்வூதியர்களுக்கு வங்கி கிளைகளில் ஜீவன் பிரமான் வசதிகள் செய்யப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி.

எஸ்பிஐ ஓய்வூதிய சேவை: குறை தீர்க்கும் திட்டம்

இந்த இணையதளத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நீங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் உள்நுழைவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், ‘Error Screen Shot’ உடன் support.ptensionseva@sbi.co.in க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதனுடன், நீங்கள் 8008202020 எண்ணுக்கு ‘UNHAPPY’ என எஸ்எம்எஸ் அனுப்பலாம். இது தவிர, நீங்கள் வாடிக்கையாளர் எண் -18004253800/ 1800112211 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

வங்கிகளின் வலைத்தளங்களான https://bank.sbi- யிலும் புகார்களைப் பதிவு செய்யலாம் மற்றும் மின்னஞ்சல்களை customercare@sbi.co.in / dgm.customer@sbi.co.in / gm.customer@sbi.co.in ஆகியவற்றிற்கு அனுப்பலாம்.

எஸ்பிஐ பென்ஷன் சேவா: வலைத்தளத்தில் பதிவு செய்வது எப்படி?

எஸ்பிஐ பென்சன் சேவா இணையதளத்தை பயன்படுத்த முதலில் வாடிக்கையாளர் ஐடியை பெற வேண்டும். அதற்கு முதலில், உங்கள் பென்சன் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். பிறந்த தேதி, வங்கிக் கிளை, வங்கியில் பதிவு செய்த இமெயில் ஐடி ஆகியவற்றையும் வழங்க வேண்டும். புதிய பாஸ்வோர்ட் இட்டு உறுதிப்படுத்த வேண்டும். இதன்பின் இமெயிலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து கணக்கை செயல்படுத்த வேண்டும். புதிய கணக்கு திறக்கப்பட்ட பின்னர் பென்சன் கட்டணம் தொடர்பான விவரங்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும். இமெயில் மூலமாகவோ, எஸ்பிஐ வங்கிக் கிளை மூலமாகவோ பென்சன் ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi updates pension seva portal check facilities

Next Story
மோசமான வங்கிக்காக ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com