Post Office: SBI கஸ்டமர்ஸ் உஷார்... இதைச் செய்யாவிட்டால் உங்க பான் கார்டு செயல் இழக்கும்
பான் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து மார்ச் 31 2022 வரை 6 மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்தது மத்திய நேரடி வரி வாரியம்.
link PAN with aadhar for seamless banking services : பிரச்சனையற்ற நிம்மதியான வங்கி சேவைகளுக்காக உங்களின் ஆதார் அட்டை எண்ணுடன் பான் அட்டை எண்ணை இணைக்கவும் என்று எஸ்.பி.ஐ. தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.
Advertisment
இதனை உடனடியாக செய்யவில்லை என்றால் பான் அட்டை செயல்பாடு நிறுத்தப்படும். மேலும் பல்வேறு முக்கியமான பண பரிவர்த்தனை சேவைகளில் பான் அட்டை எண்களை உபயோகிக்க இயலாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளது எஸ்.பி.ஐ.
ஆதாருடன் பான் அட்டை எண்ணை இணைக்க இறுதி நாள் எது?
செப்டம்பர் மாதம் அரசு மேலும் 6 மாதங்களுக்கு இந்த இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டித்தது. வருமான வரித்துறையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் பான் அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து மார்ச் 31 2022 வரை 6 மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்தது மத்திய நேரடி வரி வாரியம். வங்கிக் கணக்குகள் திறக்க, பணத்தை டெபாசிட் செய்ய, டிமெட் கணாக்குகள் துவங்க, அசையா சொத்துகள் தொடர்பான பரிவர்த்தனை மற்றும் செக்யூரிட்டிகளுக்கு பான் அட்டை மிகவும் அவசியமாகிறது. எனவே இதனை ஆதார் அட்டையுடன் இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆதாருடன் பான் அட்டையை இணைப்பது எப்படி?
எஸ்.எம்.எஸ். மூலமாக இணைக்க UIDPAN<12-இலக்க ஆதார் அட்டை எண்><10-இலக்க பான் அட்டை எண்> ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
இணையத்தின் மூலம் இணைக்க
incometaxindiaefiling.gov.in என்ற இணையத்திற்கு செல்லவும். அதில் லிங்க் ஆதார் என்ற பகுதியின் கீழ் our services என்ற டேப் இருக்கு. அதில் பான் மற்றும் ஆதார் தகவல்கள், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து லிங்க் ஆதார் என்ற டேப்பை க்ளிக் செய்தால் இந்த இரண்டு எண்களும் இணைக்கப்பட்டுவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil