ஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா?

எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம்

எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டுக்க்டன்

வீட்டுக்க்டன்

சொந்த வீடு.. பெரிய குடும்பம் தொடங்கி நடுத்தர குடும்பங்கள் வரை பலரின் கனவும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான். இதற்காக நாம் அனைவரும் முதலில் எடுக்கும் முயற்சி ஹோம் லோன். வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.

Advertisment

ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு வழிச் சொல்லும் விதமாக எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் போன்ற தகவல்கல் இங்கே பகிரப்பட்டுள்ளன.

எஸ்பிஐ வங்கி :

எஸ்பிஐயில் வீட்டுக்கடன் வசதியில் பல திட்டங்கள் உள்ளன. 30 லட்சம் வரையிலான தொகைக்கு கடன் பெறும் பணி செய்யும் பெண்களுக்கு 8.45-8.55% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 8.55% வட்டி. பணி அல்லாது வியாபரம் செய்வோருக்கு 8.6% - 8.7% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

ஹெச்.டி.எஃப்.சி வங்கி:

பணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% - 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% - 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ  வங்கி;

பணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.

Sbi Icici Bank

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: