scorecardresearch

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பி.என்.பி., வீட்டுக் கடன் வட்டி எப்படி.. செக் பண்ணுங்க

கடந்த காலங்களில் 7 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன் விகிதம் தற்போது பெரும்பாலான வங்கிகளில் 9 சதவீதமாக உள்ளது.

Know the benefits of home loans
வீட்டுக் கடனைப் பெறத் திட்டமிடும் போது, EMIகளை சரியான நேரத்தில் செலுத்துவதற்கான உத்திகள் எப்போதும் இருக்க வேண்டும்.

Home Loan Interest Rate in Banks: இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு தற்போதுவரை ரெப்போ விகிதத்தை 190 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. அந்த வகையில், தற்போதைய விகிதங்கள் 5.9 சதவீதமாக உள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன. முன்பு 7 சதவீதமாக இருந்த வீட்டுக் கடன் விகிதம் தற்போது பெரும்பாலான வங்கிகளில் 9 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி வங்கிகள் வழங்கும் சமீபத்திய கடன் விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

எஸ்பிஐ

வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி வெவ்வேறு வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 8.4 சதவீதத்தில் இருந்து தொடங்கி 9.05 சதவீதமாக இருக்கும்.

ஹெச்.டி.எஃப்.சி., வங்கி

HDFC வங்கியின் வீட்டுக் கடன் விகிதங்கள் பெண்களுக்கு 8.6 சதவீதத்திலும் மற்றவர்களுக்கு 8.65 சதவீதத்திலும் தொடங்கி ரூ. 30 லட்சம் வரையிலான கடனுக்கு 9.1 சதவீதமாக காணப்படுகிறது.
. ரூ.30.01 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 8.85 சதவீதம் முதல் 9.40 சதவீதம் வரை இருக்கும்.

ஐசிஐசிஐ வங்கி

எஸ்பிஐயைப் போலவே, ஐசிஐசிஐ வங்கியும் விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
அடிப்படை வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.4 சதவீதம் மற்றும் கடன் வாங்குபவரின் சுயவிவரத்தைப் பொறுத்து ரூ.9.5 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிரெடிட் ஸ்கோர், சுயவிவரம் மற்றும் வீட்டுக் கடன் வகையைப் பொறுத்து 8.20 சதவீதம் முதல் 9.35 சதவீதம் வரை வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதம் + RLLR+BSP 0.45 சதவீதம் வரை உள்ளது. இதனால், வட்டி 8.65 சதவீதமாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi vs hdfc vs icici vs pnb housing loan rates compared