sbi-fixed-deposit | icici-bank | ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை முதலீடு செய்வதற்கான பொதுவான வழியாகும். இது குறைந்த ஆபத்துள்ள முதலீடாகக் கருதப்படுகிறது. எனினும் இதில் பணத்தில் முதலீடு, காலம், வங்கிகளை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும்.
பொதுவாக பல்வேறு வங்கிகள் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மூத்த குடிமக்களும் கூடுதல் 0.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன், பல்வேறு வங்கிகளின் FD விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இதில் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 6.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மூத்தக் குடிமக்கள் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகளைப் பெறுவார்கள்.
குறிப்பாக, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு, வங்கி 6.80 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு, வங்கி 7 சதவீத விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான வட்டி விகிதங்களுக்கு பொருந்தும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்.டி.)
நவம்பர் 16, 2023 நிலவரப்படி, இந்த வங்கி தனது எஃப்டி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்குகிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் கூடுதல் 0.5 சதவீத வட்டி கிடைக்கும்.
மேலும், இதன் விளைவாக 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் 3.50 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதம் வரை விகிதம் வட்டி கிடைக்கும்.
இது மட்டுமின்றி, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 6.70 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகப்பட்சமாக 7.75 சதவீதமும் வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“