தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரித்திருக்கலாம். தற்போதைய ரெப்போ விகிதம் 8 பிப்ரவரி 2023 அன்று ரிசர்வ் வங்கியால் (RBI) 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.2 கோடி வரையிலான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் நாட்டின் சில பெரிய வங்கிகள் தற்போது 3 முதல் 7.75 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட்க்கு வட்டி வழங்குகின்றன.
ரெப்போ விகித உயர்வால் வட்டி விகித உயர்வு ஊக்குவிக்கப்படுகிறது. ரெப்போ விகித உயர்வின் விளைவாக, ஃபிக்ஸட் டெபாசிட்க்கு வங்கிகள் கவர்ச்சிகர வட்டியை வழங்குகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா<
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ பிப்ரவரி 15, 2023 அன்று ரூ.2 கோடிக்குக் குறைவான எஃப்டிக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
மாற்றியமைக்கப்பட்ட FD விகிதங்கள் பொது மக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன. , மறுபுறம், மூத்த குடிமக்களுக்கு, FD விகிதங்கள் 3.50 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு பொருந்தும்.
பேங்க் ஆஃப் பரோடா
முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பாங்க் ஆப் பரோடாவும் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
FD விகிதங்கள் மார்ச் 17, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
பொது மக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.05 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரையிலும் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையில் Fd விகிதங்களை வங்கி வழங்குகிறது.
மேலும், வங்கி 399 நாட்கள் (பரோடா திரங்கா டெபாசிட் திட்டம்) வழங்குகிறது, இதன் கீழ் பொது மக்களுக்கு 7.05 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்கள் 7.55 சதவீதம் வட்டி பெறுகிறார்கள்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, 2 கோடி ரூபாய்க்கும் குறைவான அதிக FD விகிதங்களை வழங்கும் பட்டியலில் 3வது பொதுத்துறை கடன் வழங்குநராக உள்ளது.
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, நவம்பர் 25, 2022 அன்று வட்டி விகிதங்களை உயர்த்தியது. வங்கியானது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொது மக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.30 சதவீதம் வரையிலான FD மீதான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பொது மக்களுக்குப் பொருந்தக்கூடிய சாதாரண விகிதங்களை விட கூடுதலாக 0.50% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/