SBI IMPS Charges Waived Off: NEFT, RTGS போன்ற ஆன்லைன் வங்கி பணிப்பரிவர்த்தனை முறை கட்டணங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் விலக்கு அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த சர்வீஸ்களுக்காண கட்டணத்தில் தள்ளுபடி செய்துள்ளது.
இதுகுறித்த வங்கி அறிக்கையின் படி, ஜூலை 1, 2019 முதல் RTGS, NEFT ஆகிய பணிப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் யோனோ ஆப் மூலம் செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். அதேபோன்று, ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பரிவர்த்தணை செய்யும் போதும் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். ஆகஸ்ட் 1, 2019 முதல் IMPS மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் (சில்லறை & டிஜிட்டல் பேங்கிங்) எம்டி பி.கே.குப்தா கூறிகையில், "எங்களது வங்கியின் மிக முக்கிய குறிக்கோள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வசதிகளை செய்துக் கொடுத்து, பணப்பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மூலம் செய்ய வைப்பதே ஆகும். இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் முயற்சியாக, YONO, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் கட்டணத்தில் தள்ளுபடி அளித்திருக்கிறோம்.
பாரத ஸ்டேட் வங்கியின் NEFT மற்றும் RTGS பணப்பரிவர்த்தனையின் போது, வங்கியின் கிளை மூலம் பரிமாற்றம் செய்தால் 20 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என SBI அறிவித்துள்ளது. IMPS பரிவர்த்தனையின் போது, ரூ.1000 வரை பணப்பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என தெரிவித்துள்ளது.