Sbi Fixed Deposit | இந்திய ரிசர்வ் வங்கியின் மாறிவரும் ரெப்போ ரேட் விகிதங்களுக்கு ஏற்ப வங்கிகள் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு நல்ல வட்டியை வழங்குகின்றன.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு போட்டி போடும் வகையில் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன. எனினும், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு மட்மே ரிசர்வ் வங்கி காப்பீடு உண்டு என்பதை முதலீட்டாளர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பினும் சம்பந்தப்பட்ட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ வீகேர் திட்டம் அடுத்த ஆண்டு (2024) மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதிர்ச்சி காலம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும். மே2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது.
கடைசியாக செப்டம்பர் 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்ருந்தது. இந்தத் திட்டத்தில் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ வீகேர் வட்டி
இதில், ரூ.2 கோடிக்கும் குறைவான 45 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். 46 நாள்கள் முதல் ஓராண்டுக்குள்ளான டெபாசிட்களுக்கு 5 முதல் 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதேநேரத்தில் 3 ஆண்டுகள் டெபாசிட்களுக்கு 7 முதல் 7.3 சதவீதம் வட்டியும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
அதாவது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி 3.5 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுக்கு மேல் கணக்கை தொடங்கும்போது ரூ.1.50 லட்சம் வரை 80சி வரி விலக்கு அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“