SBI Wecare Senior Citizen FD Scheme: இன்னும் 14 நாள்கள் மட்டுமே. அதிக வட்டியுடன் கூடிய மூத்த குடிமக்களுக்கான SBI Wecare எஃப்.டி திட்டம் இந்த மாத இறுதிக்குள் முடிவடைகிறது.
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்திற்கான (FD) காலத்தை ஜூலை மாதம் நீட்டித்தது.
இந்த நிலையில் திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
எஸ்பிஐ வீகேர் திட்டம் தொடக்கம்
எஸ்பிஐ வீகேர் (SBI Wecare) மூத்த குடிமக்கள் எஃப்.டி திட்டம், மே 2020 இல் தொடங்கப்பட்டது. முதலில், செப்டம்பர் 2020 இன் ஆரம்ப முதிர்வு தேதியைக் கொண்டிருந்தது.
இதுவரை பல நீட்டிப்புகளைப் பெற்றுள்ளது, கடைசியாக ஜூன் 30, 2023 நீட்டிக்கப்பட்டது.
எஸ்பிஐ சிறப்பு எஃப்.டி திட்டத்தின் நோக்கம் "மூத்த குடிமக்களின் வருமானத்தைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களின் கால டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவதாகும்.
டெபாசிட் காலம்
மூத்த குடிமகன், பொது மக்களுக்கு கார்டு விகிதத்தை விட 30 bps (தற்போதுள்ள பிரீமியமான 50 bps க்கு மேல்) கூடுதல் பிரீமியத்தைப் பெறுவார்.
கால வைப்புத்தொகைக்கான வட்டியை மாதாந்திர/காலாண்டு இடைவெளியில் செலுத்திக்கொள்ளலாம். சிறப்பு கால டெபாசிட் முதிர்வு வட்டியில், டிடிஎஸ் நிகரமாக, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டமானது உள்நாட்டு கால வைப்புத்தொகையாகும். வைப்புத்தொகையின் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வைப்பு காலம் 10 ஆண்டுகள்.
இந்த FD திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது, அதே நேரத்தில் வருமான வரிச் சட்டத்தின்படி பொருந்தும் விகிதத்தில் TDS பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“