எஸ்.பி.ஐ., மூத்த குடிமக்களின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தின் கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது. இந்த "WECARE" மூத்த குடிமக்களின் கால வைப்புத் திட்டம் மே 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் தனித்துவமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, தற்போது கடைசி தேதி ஜூன் 30, 2023 ஆக உள்ளது. அதாவது, 3 மாதங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வட்டி
இந்தத் திட்டத்தில் ஒருவர் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணத்தை சேமிக்கலாம். இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். இந்தத் திட்டத்தில் நாள்களுக்கு ஏற்ப வட்டி விகிதத்திலும் வேறுபாடு உண்டு. முழு விவரங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி இணையதளத்தை பார்வையிடவும்.
கடன் வசதி
மேலும் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. வரி விலக்கு வசதியும் உண்டு.
எஸ்பிஐ சர்வோத்தம் டெபாசிட்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) டெபாசிட் செய்பவர்கள் வழக்கமான நிலையான வைப்புகளை விட அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். மூத்த குடிமக்கள் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.9 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். ஓராண்டு காலத்திற்கு, வங்கியில் 7.6 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“