எஸ்பிஐ அம்ரித் கலாஷ், வீ கேர் என இரண்டு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை கொண்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு மூத்த குடிமக்கள் திட்டமான வீ கேர் (SBI WeCare) மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது.
Advertisment
இந்த சிறப்பு எஃப்டி மூத்த குடிமக்களின் கால வைப்புகளுக்கு கூடுதல் வட்டியை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கடைசி தேதி
இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய டெபாசிட் மற்றும் முதிர்வு டெபாசிட்டுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் கிடைக்கும்.
Advertisment
Advertisements
எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்கள் எஃப்.டி திட்டம்
SBI மூத்த குடிமக்களுக்கு 0.50% அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது, வழக்கமான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு 3.50% முதல் 7.50% வரை மாறுபடும்.
காலம்
வட்டி
7 நாள்கள் முதல் 45 நாள்கள்
3.5 சதவீதம்
46 நாள்கள் முதல் 179 நாள்கள்
5 சதவீதம்
180 நாள்கள் முதல் 210 நாள்கள்
5.75 சதவீதம்
211 நாள்கள் முதல் 1 ஆண்டுக்குள்
6.25 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுக்குள்
7.3 சதவீதம்
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள்
7.5 சதவீதம்
3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள்
7 சதவீதம்
5 ஆண்டு முதல் 10 ஆண்டுவரை
7.50 சதவீதம்
400 நாள்கள் அம்ரித் கலாஷ் சிறப்பு எஃப்டி திட்டம்
7.6 சதவீதம்
எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்கள் எஃப்டி வட்டி விகிதம்
இந்தத் திட்டத்தில் வருமான வரி விதிகளின்படி TDS பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். படிவம் 15G/15H ஐ டி விதிகளின்படி வரி விலக்கு பெற வைப்பவர் சமர்ப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“