scorecardresearch

உங்க பணத்திற்கு பக்கா பாதுகாப்பு… எஸ்.பி.ஐ ATM-ல் பணம் எடுக்க இது அவசியம்!

எஸ்.பி.ஐ ATM-ல் ஓடிபி நம்பரை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்களால் பணம் எடுக்க முடியும்.

SBI Whatsapp Banking
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவை

இந்திய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் வாடிக்கையாளர்கள் ATM-ல் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி வங்கி எடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும்போது, ஒடிபி நம்பர் கேட்கும். இந்த ஓடிபி நம்பர் நீங்கள் வங்கியில் கொடுத்த செல்போன் நம்பருக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்த ஓடிபி நம்பரை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்களால் பணம் எடுக்க முடியும். அதேபோல் வாட்ஸ்அப் வங்கி சேவையையும் எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் வங்கி சேவை
இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை பெற முதலில் பதிவு செய்துகொள்வது அவசியம். இதற்கு 72089-33148 என்ற எண்ணுக்கு WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி (ஸ்பேஸ்) விட்டு உங்களின் வங்கிக் கணக்கு எண்ணை தெரிவிக்கவும்.

உங்களது வங்கிக் கணக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் 91 90226-90226 என்ற எண்ணில் இருந்து, “அன்பார்ந்த வாடிக்கையாளரே உங்களது வாட்ஸ்அப் வங்கி சேவை வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது” என்ற குறுஞ்செய்தி வரும்.

இந்த வாட்ஸ்அப் சேவை மூலம், வங்கிக் கணக்கு இருப்பு, மினி நிதிநிலை அறிக்கை மற்றும் ஏதேனும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi whatsapp banking services

Best of Express