பணம் எடுக்க, போட, கடன் வாங்க எதுக்குமே பேங்க போக வேண்டாம்! பிரபல வங்கியின் அல்டிமேட் அறிமுகம்!

நினைத்த நேரத்தில் கார்டு இல்லாமலே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

By: March 21, 2019, 4:00:32 PM

sbi yono loan : பொதுத்துறை வங்கிகளில் தனக்கென தனி அடையாளத்தையும் பெயரையும் பெற்றுள்ள எஸ்பிஐ வங்கி கடந்த வாரம் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்த மிகச் சிறந்த திட்டம் தான் யோனோ ஏடிஎம்.

அதாவது டெபிட் கார்டு இல்லாமலே எஸ்பிஐ வாடிக்கையாளர்களால் ஏடிஎம் களின் பணம் எடுக்க முடியும்.எஸ்பிஐ, யோனோ கேஷ் மூலம் கார்ட் இல்லா ஏடிஎம் பரிவர்த்தனையை அறிமுகம் செய்தது மற்ற வங்கிகளையும் திக்கு முக்காட வைத்தது.

யோனோ எஸ்பிஐ, இந்தியாவில் வங்கிச் சேவைகளை பல்தரப்பட்ட தளங்களில் அளிப்பது மற்றும் வாழ்க்கை முறை பயன்பாட்டு தளத்தில் வங்கிச் சேவைகளை அளிப்பது என இரண்டையும் ஒருங்கிணைத்திருக்கும் முதல் வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கி இதை செயல்படுத்தும் விதமாக ‘யோனோ கேஷ்’ [YONO Cash] என்னும் புதிய கார்ட் இல்லா ஏடிஎம் பரிவர்த்தனையை அறிமுகம் செய்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகளை தங்களது போனில் இருக்கும் யோனோ செயலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். அப்படி ஒரு முறை எண் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொண்டால் போது நினைத்த நேரத்தில் கார்டு இல்லாமலே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

read more.. எஸ்பிஐ – யில் இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க.. அப்புறம் வேற எங்கேயும் போக மாட்டீங்க!

சரி எஸ்பிஐ வங்கியில் செயல்பட்டு இந்த யோனோ வசதி மூலம் நீங்கள் 3 வகையான பலன்களை பெறலாம்! என்னென்ன தெரியுமா?

1. கடன் வசதி :

வீட்டுக் கடன், பெர்சனல் லோன், கார் லோன், கல்விக் கடன், அவசரக் கடன் என உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் வங்கிக்கு நேராக சென்று விசாரிக்கனும் அல்லது அப்ளே செய்ய வேண்டிய அவசியமே இல்லை. யோனோ செயலியில் இருக்கும் லோன் என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நீங்கள் வீட்டிலிருந்தப்படியே 5 லட்சம் வரை லோன் பெற முடியும்.

2. பில் பேமண்ட்:

கரண்ட் பில் தொடங்கி, மளிகை கடை கடன், டிஸ் மாதத்தவணை என நீங்கள் யோனோ செயலி மூலமாகவே தேவையான பில்களை கட்ட முடியும்.

3. இன்சூரன்ஸ் :

மருத்துவ காப்பீடு தொடங்கி ஆயுள் காப்பீடு, குழந்தைகள் சேமிப்பு என எந்த ஒரு திட்டத்தையும் நீங்கள் வீட்டில் இருந்தப்படியே தொடங்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi yono loan 3 things sbi customers can do with yono app

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X