/tamil-ie/media/media_files/uploads/2019/02/kids-kJGI-621x414@LiveMint.jpg)
SBI Zero Balance Savings Account : குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. பெஹ்லா கதம், பெஹ்லா உடான் என்ற இரண்டு திட்டங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் சேர்த்து வைக்கலாம். பெஹ்லா கதம் வங்கிக் கணக்கினை நீங்கள் உங்களின் 18 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்காக தொடங்கலாம்.
பெஹ்லா உடன், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். பயனர்கள் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு திட்டங்களும் ஜீரோ பேலன்ஸில் துவங்க இயலும்.
இந்த கணக்குகளில் 10 லட்ச்சத்திற்கும் அதிகமாக சேமிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : IMPS மூலம் பணம் அனுப்ப எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா?
தகுதி :
பெஹ்லா கதம் : எந்த வயது குழந்தைக்கும் பெற்றோர் அல்லது கார்டியன் இந்த கணக்கைத் தொடங்கலாம்.
பெஹ்லா உடான் : 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கணக்கைத் தொடரலாம். குழந்தையின் பெயரிலேயே இந்த கணக்கை துவங்க இயலும்.
ஏ.டி.எம் கார்ட்
இரண்டு வங்கிக் கணக்கு திட்டங்களிலும் குழந்தையின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஏ.டி.எம் கார்ட் வழங்கப்படும். வித்ட்ரா லிமிட்டேசன் 5000 ரூபாய்
செக்புக்
பெஹ்லா கதமில் 10 செக் லீஃவ்களை கொண்ட செக்புக் கார்டியனிற்கு வழங்கப்படும். பெஹ்லா உடானில் 10 செக் லீஃவ்களை கொண்ட செக்புக் குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையின் கையெழுத்து செல்லுபடியாகும்.
நெட் பேங்கிங்
இரண்டு கணக்குகளும் நாள் ஒன்றிற்கு 5000 வரையில் பணப்பறிமாற்றம் செய்து கொள்ளலாம். NEFT,DD சேவைகளும் அடங்கும்.
மொபைல் பேங்கிங்
இரண்டு கணக்குகளும் நாள் ஒன்றிற்கு 2000 வரையில் பணப்பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.
வட்டி : ஆண்டு ஒன்றிற்கு 3.50% ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.