SBI Zero Balance Savings Account: வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் பெரிய தலைவலி, மினிமம் பேலன்ஸ் குறித்து தான். அவசரத்திற்கு பணம் எடுக்கலாம் என்று நினைத்தால் வங்கியின் நிபந்தனைப்படி குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்சாக கணக்கில் வைக்க வேண்டும்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
அப்படி இல்லையென்றால் அபராதத் தொகை கட்ட நேரிடும். அந்த அபராதத் தொகையை கட்ட தவறினால் அதற்கும் சேர்த்தும் ஒரு குறிப்பிட்ட எக்ஸ்ட்ரா தொகையை செலுத்த வேண்டும். இந்த பிரச்னையை போக்க, எஸ்.பி.ஐ வங்கியில் ஜீரோ பேலன்சில் சிறப்பான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில், இந்த செய்தி,
பேசிக் சேமிப்பு கணக்கு
இந்த வகையான கணக்குகள், ஏழை எளியோர் பயன்பெற வழங்கப்படுகிறது. இதற்கு தகுந்த கே.ஒய்.சி சான்றுகள் வழங்கப்பட வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.
இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும். ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கியில் நேரடி பரிவர்த்தனைகள் மூலம் மாதத்துக்கு 4 முறை மட்டுமே பணம் எடுக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
ஜீரோ பேலன்ஸ் கணக்கை இவர்கள் தான் துவங்க வேண்டும் என்ற வரம்பு ஏதும் இல்லை. சாதாரண தனிநபர் என யார் வேண்டும் என்றாலும் ஜிரோ பேலன்ஸ் கணக்கை துவங்கலாம். எஸ்பிஐ வங்கி ஜிரோ பேலன்ஸ் கணக்கை இணையதளம் மூலமாகவும் திறக்கலாம்.
தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்குச் சேவைகள் அனைத்தும் கிடைக்கும். வட்டி விகிதம் ஜிரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கிற்கு எப்போதும் போல அனைத்து வகைச் சேமிப்புக் கணக்குகளுக்குப் பொதுவாக அளிக்கப்படுகின்ற 3.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும். டெபிட் கார்டு ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் ஏதும் இல்லை. இதுவே விசா மற்றும் மாஸ்டர் போன்ற கார்டுகள் வேண்டும் என்றால் 10 முதல் 500 ரூபாய் வரை பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள வங்கி சேவை ஜிரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும். ஒருவேலைக் கணக்கை மூட வேண்டும் என்றாலும் கட்டணம் ஏதும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.