/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1949.jpg)
state bank of india Nrew Rules From October 1 - newatm charge . insufficient balance new charge
state bank of india zero balance savings account : எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் குறைந்தது பேலன்ஸ் தொகையை கணக்கில் மெயின்டெய்ன் செய்ய வேண்டும்.
மினிமம் பேலன்ஸை மெயிண்டன் பண்ணாததால் கிடைத்த அபராதம் மட்டுமே இவ்வங்கிக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய எஸ்பிஐ வங்கியில் BSBD வங்கிக் கணக்கு என்ற ஒரு வழி உள்ளது.
BSBD -பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த அக்கவுண்டை ஓப்பன் செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்.
ஏனைய சேமிப்பு கணக்குகளுக்கு உள்ளது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த வங்கியில் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மேலும் இந்த கணக்கில் உள்ள ஒரு சலுகை, 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us