SBI News: இந்தியாவின் தலைசிறந்த வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உட்பட பல்வேறு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் எப்படி பாதுகாப்பாக வங்கி சேவையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஏடிஎம் அல்லது டெபிட் அட்டை மோசடியை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளை எப்போதும் மறைவாக செய்ய வேண்டும் என எஸ்பிஐ வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை ஏதாவது அங்கீகாரம் பெறாத பரிவர்த்தனை நடைபெற்றால் வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் எஸ்பிஐ கூறியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஏடிஎம்களில் பாதுகாப்பான வங்கி சேவையை நடத்திட எஸ்பிஐ வழங்கும் 10 குறிப்புகள்
1) உங்களுடைய பின் எண்ணை (PIN) தகுந்த கால இடைவெளியில் மாற்றுங்கள்.
2) பின் எண்ணை உள்ளீடு செய்யும் போது ATM/POS keypad ஐ மறைத்துக் கொள்ளுங்கள்.
3) உங்கள் பின் எண்ணை மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதை ஏடிஎம் அட்டை அல்லது வேறு எங்காவது எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
4) பிறந்த நாள் அல்லது திருமண நாள் ஆகியவற்றை பின் எண்ணாக பயன்படுத்துவதை தவிருங்கள்.
5) டெபிட் அட்டை மற்றும் வங்கி கணக்கில் நடைபெறும் இதர பரிவர்த்தனைகள் குறித்த குறுஞ்செய்தி பெற உங்கள் கைபேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கோடு பதிவு செய்து அதை எப்போதும் புதுப்பித்து (update) வைத்துக் கொள்ளுங்கள்.
6) உங்களுடைய OTP, டெபிட் அட்டை பின் எண் மற்றும் இதர விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
7) ஏடிஎம் பின் எண் அல்லது வேறு ஏதாவது வங்கி தொடர்பான விவரங்களை கேட்டு வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்காதீர்கள்.
8) ஏடிஎம் மையங்களுக்குள் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் செல்வதை தவிருங்கள்.
9) உங்கள் தோள்பட்டைக்கு பின்னால் நின்று உங்கள் பின் எண்ணை யாராவது திருடுவதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
10) எப்போதும் ஏடிஎம் களிலிருந்து பணம் எடுக்க YONO cash ஐ பயன்படுத்துங்கள். டெபிட் அட்டை மூலம் பணம் எடுக்க இது அங்கீகாரம் அளிக்கிறது. இது மிகவும் பாதுகாப்பானது.
இணையதள வங்கி சேவைக்கான கடவுச்சொற்கள் வாடிக்கையாளரின் குடும்ப உறுப்பினர்களின் பெயராக இல்லாமல் தனித்துவமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் டிவிட்டர் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil