SBIs doorstep banking : இந்த கொரோனா காலத்தில் வெளியே செல்ல அச்சமாக இருக்கிறதா? ஆனால் வங்கியில் பணம் எடுக்க அல்லது பணம் செலுத்த நேரடியாக அங்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று நீங்கள் வருந்துகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கானது தான் இந்த செய்தி. நீங்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தால் இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.
ரூ. 20 ஆயிரம் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்க அல்லது எடுக்க வீடு தேடி வந்து சேவையை வழங்குகிறது எஸ்.பி.ஐ.. இதற்கு உங்களுக்கு இருக்கும் ஒரே நிபந்தனை என்னவென்றால், உங்களின் வீடு உங்கள் வங்கிக் கிளையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும் என்பது தான். பணம் மட்டுமின்றி பணமற்ற வங்கி சேவைகளான செக் புக்குகளை பெறுதல், டி.டி. பெறுதல் போன்ற சேவைகளையும் இதில் பெற முடியும்.
டி.பி.எஸ். (Doorstep Banking (DSB)) எனப்படும் இந்த வங்கி சேவையை நீங்கள் பெற ரூ.75 + ஜி.எஸ்.டி. வரியை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மொபைல் செயலி, இணையதளம் மற்றும் கால் செண்டர்களின் உதவியுடன் இந்த சேவையை நீங்கள் பெற இயலும்.
டோர்ஸ்டெப் பேங்கிங்கிற்கு பதிவு செய்வது எப்படி?
முதலில் Doorstep Banking செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
உங்களின் மொபைல் எண்ணை அதில் ரெஜிஸ்டர் செய்யவும்
உங்களுக்கு ஒரு ஓ.டி.பி கிடைக்கும். அதனை நீங்கள் உங்கள் செயலில் உள்ளீடாக வழங்கவும்,
பெயர், இ-மெயில் மற்ரும் பாஸ்வெர்ட் ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து நிபந்தங்களை “அக்செப்ட்” செய்யவும்.
நீங்கள் உங்களின் முகவரியை உள்ளீடாக செலுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிகளை சேமித்துக் கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil