வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பர்களை அழைத்து கேட்டுபாருங்கள். அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவென்று?. முதலில் வரும் பதில் மினிமம் பேலன்ஸ் குறித்து தான். அவசரத்திற்கு நாம் பணம் எடுக்கலாம் என்று நினைத்தால் வங்கியின் நிபந்தனைப்படி குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்சாக கணக்கில் வைக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் வங்கி அபராதத் தொகையை கட்ட வலியுறுத்தும். அந்த அபராதத் தொகையை கட்ட தவறினால் அதற்கும் சேர்த்தும் ஒரு குறிப்பிட்ட எக்ஸ்ட்ரா தொகையை செலுத்த வேண்டும். இந்த பிரச்சனையாலே பலரும் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடர்வதற்கு முன்பு பல்லாயிரம் முறை யோசிக்கின்றனர்.
இந்த அச்சத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து போக்கும் நோக்கில் எஸ்.பி.ஐ வங்கி ஜீரோ பேலன்சில் சிறப்பான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ எஸ்.பி.ஐ வங்கியில் இருக்கும் மிக சிறப்பான ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு திட்டங்கள்.
1. பேசிக் சேமிப்பு கணக்கு:
இந்த வகையான கணக்குகள், ஏழை எளியோர் பயன்பெற வழங்கப்படுகிறது. இதற்கு தகுந்த கே.ஒய்.சி சான்றுகள் வழங்கப்பட வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.
இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும். ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கியில் நேரடி பரிவர்த்தனைகள் மூலம் மாதத்துக்கு 4 முறை மட்டுமே பணம் எடுக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
2. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு :
எஸ்.பி.ஐ வங்கியின் YONO ஆப்பின் மூலம் இந்த கணக்கை தொடங்க வேண்டும். மார்ச் 31,2019 -ம் தேதி வரை கணக்கு திறக்கப்பட்டால், மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. ஒரே ஒருமுறை வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியது இருக்கும். பிளாட்டினம் டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
குறைந்த வட்டியில் கிரேடிட் கார்டு வழங்கும் வங்கி எது தெரியுமா?
3. இன்ஸ்டா சேமிப்பு கணக்கு:
தற்போது சிறப்பு ஆஃபர் மூலம் மார்ச் 31,2019 தேதிக்குள் கணக்கு தொடங்கினால் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்கிறது sbiyono.sbi. வங்கிக்கு செல்ல அவசியமில்லாமல் உடனடியாக கணக்கை தொடங்கி விடலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
அடிப்படை தகுதி:
இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடர நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்தால் போதும். தனி நபர் அக்கவுண்ட், ஜாய்ண்ட் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட் ஏதுவாக இருந்தாலும் போதுமானது.
வட்டி விகிதம்:
இந்த வகையான கணக்குகளில் மற்ற சேமிப்பு கணக்குகளை போலவே 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
அட்ரா சக்க... செக் மூலம் ஏ.டி.ஏம்மில் பணம் எடுக்கும் வசதி! உங்களுக்கு தெரியுமா?