எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க...: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..
update mobile number on SBI : உங்கள் கைபேசி எண்ணை வங்கியில் அப்டேட் செய்யவில்லை என்றால் இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை ரூபாய் 10,000க்கு மேல் உங்களால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியாது.
நீங்கள் உங்கள் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளீர்களா ? ஆம் என்றால் உங்கள் வங்கியில் அதை அப்டேட் செய்துவிட்டீர்களா. இல்லை என்றால் அதை சீக்கிரமாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களிடம் தங்களது அப்டேட் செய்யப்பட்ட கைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் தங்களது சேமிப்பு கணக்குடன் இணைத்துக் கொள்ள சொல்லியுள்ளது. இது உங்கள் வங்கி கணக்கில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பதற்கு மட்டுமல்ல உங்கள் வங்கி கணக்கில் உங்களுக்கு தெரியாமல் உங்கள் பணத்தை வேறு யாராவது எடுத்தால் அதையும் தெரிந்து கொள்ளத்தான். ஓடிபி எனப்படும் ஓருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் பின் (PIN) ஆக்டிவேஷன் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் தான் வரும். எனவே உங்கள் கைபேசி எண்ணை வங்கியில் அப்டேட் செய்யவில்லை என்றால் இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை ரூபாய் 10,000க்கு மேல் உங்களால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியாது. ஏனென்றால் எஸ்பிஐ ஓடிபி (OTP) எண் அடிப்படையில் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Have you changed your mobile number or email id? If yes, please update it in the bank records so you don’t miss out on any of our important communication. pic.twitter.com/Qt8vKh0XXZ