SCSS vs Senior Citizen Fixed Deposit: மூத்தக் குடிமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் வங்கி நிலையான வைப்பு (FD) மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களை விரும்புகிறார்கள்.
இவை குறைந்த ஆபத்துள்ள கருவிகளாகக் கருதப்படுகின்றன. இதில் கூடுதல் வட்டியும் வழங்கப்படுகின்றன.
அதாவது பொது மக்களை விட 0.50% அதிகமாக இருக்கும். இதற்கிடையில், ஏப்ரல் 2023 இல் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியது. தற்போது அது 8.2 சதவீத விகிதமாக உள்ளது.
SCSS க்கு 8% அதிக வட்டி உள்ளது, மேலும் இந்த முதலீடு 80C வரி சேமிப்பு முதலீட்டின் கீழ் உள்ளது. அதேசமயம், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், வரி சேமிப்புப் பலன் இல்லாமல் 7.5% வருமானத்தை வழங்குகிறது.
இதற்கிடையில், FD வங்கிகள் பரந்த அளவிலான சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன, பெரிய முதலீடுகளை ஆதரிக்கின்றன, மற்றும் நெகிழ்வான காலம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
மேலும், 2023 பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களில், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ₹15 லட்சத்தில் இருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“