இன்டர்நெட் இல்லாமலே கூகுள் பே, போன் பே வழியாக பணம் அனுப்பலாம்… இந்த முறையை ஃபாலோ பண்ணுங்க

இன்டர்நெட் வசதி இல்லாமலே டிஜிட்டல் பரிவர்த்தனைகைளை மேற்கொள்ளமுடியும் என்பது தான் உண்மை. இச்சேவைக்கு 50 பைசா மட்டுமே செலவாகும். அது தொடர்பான விரிவான தகவலை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்.

இன்றைய காலக்கட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், மக்களும் தங்களை அப்கிரெட் செய்ய தொடங்கிவிட்டனர். காய்கறிகள் முதல் ஆபரண தங்க நகை வாங்குவது வரை, கையில் பணம் எடுத்து செல்வதில்லை. அதற்கு பதிலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, கூகுள் பே, போன் போ, அமெசான் பே போன்ற தளங்களில் அதிகளவில் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

ஆனால், இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு இன்டர்நெட் வசதி கட்டாயம் வேண்டும்.இது பலருக்கு சிக்கலாக இருந்தது. இணைய வேகம் குறைவான பகுதிகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியவில்லை என கவலை கொள்கின்றனர். தற்போது, அந்த கவலையை தீர்த்திடும் வகையில், இன்டர்நெட் வசதி இல்லாமலேய டிஜிட்டல் பரிவர்த்தனைகைளை மேற்கொள்ளமுடியும் என்பது தான் உண்மை. அது தொடர்பான விரிவான தகவலை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்.

இன்டர்நெட் இல்லாமல் upi மூலம் பணம் அனுப்பும் முறை

step 1: இன்டர்நெட் இல்லாமல் பணத்தை அனுப்ப விரும்புவோர், முதலில் BHIM செயலில் தங்களை பதிவு செய்து யூபிஐ கணக்கை தொடங்க வேண்டும். குறிப்பாக, அந்த கணக்கில் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள சரியான மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்.

step 2: அடுத்து, உங்களது மொபைலில் ‘*99#’ என்ற எண்ணிற்கு கால் செய்ய வேண்டும். அப்போது, பணம் அனுப்புவது, பணம் பெறுதல், பேலன்ஸ் தொகை பார்ப்பது, சுய விபரம் ,நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பண வரித்தனைகள் மற்றும் UPI PIN கொண்ட ஏழு விருப்பங்களைக்கொண்ட மெனு உங்கள் திரையில் தோன்றும்.

Step 3: பணம் அனுப்பவேண்டும் என்றால், 1 என எண்ணினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை உங்களது UPI ID, வங்கி கணக்கு மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) கோட் அல்லது தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கிறது. நீங்கள் விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Step 4: நீங்கள் UPI ஐ தேர்வு செய்தால், பணம் அனுப்ப வேண்டியவரின் UPI ID யை பதிவிட வேண்டும். அதேசமயம், நீங்கள் வங்கி கணக்கை தேர்ந்தெடுத்தால், பயனாளியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோட் பதிவிட வேண்டும். ஒருவேளை, மொபைல் நம்பர் ஆப்ஷனுக்கு சென்றால், பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் எண்ணை குறிபிட வேண்டும்.

Step 5: நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.

Step 6: இறுதியாக உங்களது UPI பின்ணை பதிவிட வேண்டும். தொடர்ந்து, “send” என்பதை கிளிக் செய்ய பணப்பரிவர்த்தனை முடிவடையும். உங்கள் மொபைலுக்கு உடனடியாக கன்பார்ம் மெசேஜ் வரும். எதிர்காலப் பரிவர்த்தனைகளுக்குப் பயனாளியின் விவரங்களை சேமிக்க உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.

இந்த சேவையையை நீங்கள் பயன்படுத்துவதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனிமேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இணைய வசதி இல்லாமலும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Send money via google pay phone pay using upi transactions without internet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express