நாம் இளம் வயதில் ஓடி ஓடி சம்பாதிக்கும் பணம், எதிர்காலத்தில் நமக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஓய்வு காலத்தில் யாரையும் நம்பியிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பல வகையான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோம். குறிப்பாக, பென்சன் திட்டம் உதவியாக இருக்கும்.
Advertisment
அந்த வகையில், 60 வயது மேற்பட்டோர்களுக்கு பென்சன் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா. இது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 2020இல் மத்திய அமைச்சரவை, முதியோர்களுக்காக இந்த திட்டத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டது. அதன்படி, இந்தத் திட்டத்தில் 2023 மார்ச் 31 வரை முதலீடு செய்து பலன் பெறலாம்.
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா சிறப்பு அம்சங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ. 15 லட்சம் ஆகும். இதில், மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் கிடைக்கிறது. 10 ஆண்டுகளுக்கான இந்த திட்டத்தில், ஆண்டுக்கு 8% உறுதியான வருவாயை வழங்குகிறது.
மாதாந்திர அடிப்படையில் இந்த பென்சன் வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டு, ஒரு வருட அடிப்படையிலும் நீங்கள் பென்சன் வாங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,658 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1000 பெறுவதற்கு ரூ.1,62,162 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.
குறைந்தப்பட்சம் மற்றும் அதிகப்பட்ச முதலீட்டு தொகை
இந்த திட்டத்தில் ஒரே பிரீமியமாக மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதன் விவரங்களை கீழே காணுங்கள்
பென்ஷன் தொகை
குறைந்தப்பட்ச முதலீடு
அதிகப்பட்ச முதலீடு
ஆண்டிற்கு
ரூ1,56,658
ரூ14,49,086
அரையாண்டு
ரூ1,59,574
ரூ14,76,064
காலாண்டு
ரூ1,61,074
ரூ14,89,933
மாதம்
ரூ1,62,162
ரூ15 லட்சம்
திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?
குறைந்தப்பட்ச வயது : 60 அதிகப்பட்ச வயது: இல்லை பாலிசி காலம்: 10 ஆண்டு
குறைந்தப்பட்ச பென்சன் தொகை - மாதம் ஆயிரம் ரூபாய் காலாண்டு - 3 ஆயிரம் அரையாண்டு - 6 ஆயிரம் ஆண்டுக்கு - 12 ஆயிரம்
அதிகப்பட்ச பென்சன் : மாதம் ரூ9 ஆயிரத்து 250 ஆகும்
காலாண்டு - ரூ27,750 அரையாண்டு -ரூ55,500 ஆண்டிற்கு - ரூ1 லட்சத்து 11 ஆயிரம்
10 வருட பாலிசி காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர் உயிரோடு இருந்தால், கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும். அதேநேரம், பாலிசி காலத்திலேயே பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு முழு முதலீட்டுத் தொகையும் கிடைக்கும். மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு கடன் பெறும் வசதி உள்ளது.
மேலும், இத்திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil