/tamil-ie/media/media_files/uploads/2023/03/fixed-deposit-5.webp)
ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மே 18, 2020ல் அறிமுகப்படுத்தியது.
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டு வட்டி 3.5-7.75 சதவிகிதம் வரை கொடுக்கின்றன.
பொதுமக்களுக்கு 3-7.25 சதவீதம் அளிக்கின்றன. இந்த நிலையில், பல வங்கிகள் கடந்த சில மாதங்களாக மூத்த குடிமக்கள் மற்றும் பிற வைப்பாளர்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில், ஃபிக்ஸட் டெபாசிட்கள் பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வாகத் தொடரும் அதே வேளையில், மற்ற நிதிக் கருவிகளைச் சேர்க்கும் வகையில் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கலாம் என்று நிதி திட்டமிடுபவர்கள் கூறுகின்றனர்.
மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
மேலும், , வரவிருக்கும் மாதங்களில் ரெப்போ விகிதத்தில் ஏதேனும் குறைப்பு, டெர்ம் டெபாசிடர்களுக்கு வழங்கப்படும் வருமானத்தை குறைக்க வணிக வங்கிகளைத் தூண்டும்.
வ.எண் | வங்கி | பொதுமக்கள் | மூத்தக் குடிமக்கள் |
01 | RBL Bank | 3.50% - 7.80% | 4.00% - 8.30% |
02 | IDFC First Bank | 3.50% - 7.75% | 4.00% - 8.25% |
03 | KVB Bank | 4.00% - 7.50% | 4.50% - 8.00% |
04 | Canara Bank | 4.00% - 7.25% | 4.00% - 7.75% |
05 | Punjab National Bank | 3.50% - 7.25% | 4.00% - 7.75% |
06 | Bank of Baroda | 3.00% - 7.25% | 3.50% - 7.75% |
07 | Axis Bank | 3.50% - 7.10% | 3.50% - 7.85% |
08 | HDFC Bank | 3.00% - 7.25% | 3.50% - 7.75% |
09 | State Bank of India | 3.00% - 7.10% | 3.50% - 7.60% |
10 | ICICI Bank | 3.00% - 7.10% | 3.00% - 7.10% |
11 | IDBI Bank | 3.00% - 6.75% | 3.00% - 6.75% |
12 | IndusInd Bank | 6.25% - 7.75% | 6.75% - 8.25% |
13 | UCO Bank | 2.90% - 7.15% | 2.90% - 7.20% |
14 | Central Bank of India | 3.50% - 6.75% | 4.00% - 7.25% |
15 | Indian Bank | 2.80% - 6.70% | 3.30% - 7.20% |
வங்கிகளின் இணையதளங்களின்படி, மூத்த குடிமக்கள் மற்றும் பிற வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களின் விரைவான ஒப்பீடு மேலே உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.