Senior Citizen fixed deposit interest rate hike October 2023: பல்வேறு வங்கிகள் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அக்டோபரில் திருத்தியுள்ளன. வங்கிகளால் திருத்தப்பட்ட எஃப்.டி(FD) விகிதங்கள் வருமாறு:
யூனிட்டி ஸ்மால் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) 701 நாட்களுக்கு நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 9.45% p.a என்ற கவர்ச்சிகரமான விகிதத்தை வழங்குகிறது. 701 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புகளில், பொது முதலீட்டாளர்கள் 8.95% வட்டி பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா, 3 ஆண்டுகள் வரையிலான பல்வேறு தவணைக்காலங்களில் டெர்ம் டெபாசிட்கள் உட்பட உள்நாட்டு சில்லறை கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
இப்போது மூத்த குடிமக்களுக்கு 2 முதல் 3 வருட டெபாசிட்களுக்கு 7.9% வரை வட்டி கிடைக்கும். திரங்கா பிளஸ் டெபாசிட் திட்டத்தின் கீழ் 399 நாள்கள் வைப்புத்தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு BoB 7.8% வட்டி கிடைக்கும்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 46-90 நாள்கள் டெபாசிட்கள் மீதான எஃப்.டி விகிதங்களை 125 bps வரை அதிகரித்துள்ளது. இந்த குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு முன்பு 3.50 சதவீதத்திற்கு எதிராக இப்போது 4.75 சதவீதத்தை வழங்குகிறது.
கனரா வங்கி
கனரா வங்கி அதன் FD விகிதங்களை அக்டோபர் 5 முதல் திருத்தியது. இப்போது மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது.
யெஸ் வங்கி
அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் வகையில், யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கர்நாடகா வங்கி
கர்நாடகா வங்கி, அக்டோபர் 1 முதல் மூத்த குடிமக்களுக்கு 7.75% FD வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா
அக்டோபர் 1 முதல், பாங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு 7.75% FD வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்
அக்டோபர் 1 முதல், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இண்டஸ்இந்த் வங்கி (Indusind Bank)
அக்டோபர் 1 முதல், இண்டஸ்இந்த் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.25% FD வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“