9 சதவீதம் வரை வட்டி; மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு அதிக லாபம் தரும் வங்கிகளின் முழு பட்டியல்!
வைப்பு நிதி திட்டத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர். அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இது விருப்ப தேர்வாக அமைகிறது. அதற்கான முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வழக்கமான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும் போது, மூத்த குடிமக்களின் வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பாக பல்வேறு தகவல்களை ஆராய்வது அவசியமாகும்.
Advertisment
1. அதிக வட்டி விகிதங்கள்: வழக்கமான முதலீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் பொதுவாக வைப்பு நிதிகளில் 0.25% முதல் 0.75% வரை அதிக வட்டி விகிதங்களை பெறுகின்றனர். உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி போன்ற முன்னணி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 7.5% மேல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபகரமான விருப்பமாக அமைகிறது.
2. தொடர் வருமானம்: மூத்த குடிமக்களளின் வைப்பு நிதிகள், குறிப்பிட்ட காலமுறை வட்டி செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குகின்றன. இது ஓய்வுக்குப் பின் நம்பகமான வருமான ஆதாரமாகச் செயல்படும். தினசரி செலவுகளுக்கு வட்டி வருவாயை நம்பி இருப்பவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. வரி தாக்கங்கள்: வைப்பு நிதிகள் ஸ்திரத்தன்மையை வழங்கினாலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் சம்பாதித்த வட்டிக்கு வரி விதிக்கப்படும். மூத்த குடிமக்கள் வரி சேமிப்பு வைப்பு நிதிகளை பரிசீலிக்க வேண்டும். இல்லையென்றால் பிரிவு 80TTB இன் கீழ் விருப்பங்களை ஆராய வேண்டும். இது வைப்பு நிதிகளில் இருந்து வரும் வட்டி வருமானத்தில் ரூ. 50,000 வரை கழிக்க அனுமதிக்கிறது.
Advertisment
Advertisements
4. பாதுகாப்பு மற்றும் பணப்புழக்கம்: டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (DICGC) மூலம் ஒரு டெபாசிட்டருக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுவதால், வங்கி வைப்பு நிதிகள் குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அபராதங்களை விதிக்கக் கூடும். எனவே, பணப்புழக்கத் தேவைகளை கவனமாக மதிப்பிட வேண்டும்.
5. பணவீக்கம் மற்றும் வருமானம்: பணவீக்கம் 6% ஆக இருப்பதால், வைப்பு நிதிகளில் உண்மையான வருமானம் மிதமானதாக இருக்கலாம். மூத்த குடிமக்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோக்களை, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் (SCSS) அல்லது நீண்ட கால வளர்ச்சிக்கான பரஸ்பர நிதிகள் போன்ற பணவீக்கத்தைத் தடுக்கும் கருவிகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும்.
எனவே, இது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியமாகிறது.