போஸ்ட் ஆபிஸில் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. அதில், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட், ஆர்.டி., தேசிய சேமிப்பு சான்றிதழ், கிஷான் விகாஸ் பத்ரா, பிபிஎஃப் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
மேலும், மூத்த குடிமக்கள் தங்கள் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்குகளை எந்த நேரத்திலும் மூடலாம். தபால் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவலின்படி, முன்கூட்டியே பணமாக்குதலுக்கு எந்த நிபந்தனை இல்லை.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் : மூத்த குடிமக்கள் கணக்கைத் தொடங்கி 6 மாதங்களுக்குப் பிறகுதான் தங்கள் நேர வைப்பு கணக்குகளை முடிக்க முடியும். அவர்கள் செலுத்த வேண்டிய முன்கூட்டிய மூடல் கட்டணமும் உள்ளது.
ஆர்.டி : மூத்த குடிமக்கள் கணக்கைத் தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தங்கள் தபால் அலுவலக RD கணக்கை மூட முடியும்.
முன்கூட்டியே மூடப்பட்டால், தபால் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவலின்படி, சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் : மூத்த குடிமக்கள் தங்கள் NSC கணக்குகளை மூட அனுமதிக்கப்படவில்லை. இறப்பு உள்ளிட்ட சமயங்களில் மூடப்படும்.
கிஷான் விகாஸ் பத்ரா : மூத்த குடிமக்கள் தங்கள் கிஷான் விகாஸ் பத்ரா (KVP) கணக்கை 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்குப் பிறகுதான் மூட முடியும்.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் : மூத்த குடிமக்கள் தங்கள் SCSS கணக்குகளை எந்த நேரத்திலும் மூடலாம். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் முன்கூட்டியே மூடுவதற்கான கட்டணங்கள் பொருந்தும்.
பிபிஎஃப் : மூத்த குடிமக்கள் தங்கள் பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே மூட முடியும். கடும் நோய்கள் ஏற்பட்டால் கணக்கை மூட அனுமதிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“