Recurring Deposit rate hike in 2023: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஆண்டு முதல் புதிய ரெப்போ ரேட் விகிதங்களை திருத்திவருகிறது.
இதனால், வைப்புத்தொகைகள் மட்டுமல்ல, வங்கிகளில் உள்ள ஆர்.டி வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களும் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை நெருங்கி உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், மே 2022 இல் 4.4% ஆக இருந்த ரெப்போ விகிதம் 6.5% ஆக அதிகரித்துள்ளது, RDs உள்ளிட்ட வங்கி வைப்பு விகிதங்களும் ஒரு வருடத்தில் உயர்ந்துள்ளன.
இதையடுத்து மே 2023 இல், சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு FD/RD மீது 9.6% வட்டியை அறிவித்தது, இது கிட்டத்தட்ட 10% ஆகும்.
அதேநேரத்தில், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 9.5% FD/RD வட்டியையும் வழங்குகிறது.
சூர்யோதாய் சிறு நிதி வங்கி
சூர்யோதாய் சிறு நிதி வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 வருட ஆர.டி. 9.6% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் ஆர்.டி திட்டத்தில் 9.1% வட்டி பெறலாம்.
இந்த வங்கியில் ஒரு மூத்த குடிமகனின் மாதம் ரூ.5 ஆயிரம் ஆர்.டி. 5 ஆண்டுகளில் ரூ.3.85 லட்சமாக உயரும்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (யூனிட்டி வங்கி) மூத்த குடிமக்களுக்கு 1001 நாட்களுக்கு 9.5% வட்டி டெபாசிட்களை வழங்குகிறது.
5 வருட டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு யூனிட்டி வங்கி 8.15% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் 1001 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 9.1% வட்டியும், 5 வருட RDக்கு 7.65% வட்டியும் பெறலாம்.
இந்த வங்கியில் ஒரு மூத்த குடிமகனின் மாத RD ரூ 5000 5 ஆண்டுகளில் ரூ.3.7 லட்சமாக இருக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆர்டி
பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கு 5 வருட RD க்கு 7.5% வட்டி வழங்குகிறது. மற்றவர்கள் RD இல் 6.6% வட்டி பெறலாம். இந்த வங்கியில் ஒரு மூத்த குடிமகனின் மாத RD ரூ 5000 5 ஆண்டுகளில் ரூ.3.6 லட்சமாக காணப்படும்.
ஹெச்.டி.எஃப்.சி ஆர்.டி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 வருட ஆர்.டி க்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது. மற்றவர்கள் ஆர்.டியில் 7% வட்டி பெறலாம்.
இந்த வங்கியில் ஒரு மூத்த குடிமகனின் மாதாந்திர ஆர்.டி. ரூ.5000 5 ஆண்டுகளில் சுமார் ரூ 3.6 லட்சமாக இருக்கும்.
ஐசிஐசிஐ வங்கி ஆர்.டி
ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு ஆர்டிக்கு 7.5% வட்டியை வழங்குகிறது. மற்றவர்கள் 5 வருட RD இல் 6.9% வட்டி பெறலாம்.
இந்த வங்கியில் மூத்த குடிமக்கள் ரூ.5 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகள் சேமித்தால் 3.6 லட்சம் தோராயமாக கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“