/tamil-ie/media/media_files/uploads/2022/12/small-cap-senior-citizen-savings-scheme.webp)
பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிற டெபாசிட்களுக்கும் வர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
அதிகரித்து வரும் வீட்டுக் கடன் மற்றும் நிலையான வைப்பு விகிதங்களுக்கு மத்தியில், SCSS க்கு அரசாங்கம் வழங்கும் வட்டி விகிதமும் மேலும் அதிகரிக்கலாம் என்று மூத்த குடிமக்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) வட்டி விகிதத்தில் சமீபத்திய திருத்தம் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
01-04-2012 மற்றும் 31-03-2013 க்கு இடைப்பட்ட நான்கு காலாண்டுகளில் SCSS வட்டி விகிதம் 9.3% என்ற உயர்வை (ATH) தொட்டது.
01-04-2013 முதல் 31-03-2015 வரையிலான முதலீடுகளுக்கு, SCSS விகிதம் 9.2% ஆகக் குறைக்கப்பட்டது. 01-04-2015 மற்றும் 31-03-2016 க்கு இடையில் மீண்டும் 9.3% ஆக அதிகரித்தது.
இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்று, அஞ்சல் அலுவலக இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, 2015 முதல் SCSS இன் கீழ் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறையத் தொடங்கியது.
SCSS வட்டி விகிதம் 01-04-2016 மற்றும் 30-09-2016 க்கு இடையில் 8.6% ஆக மாற்றப்பட்டது. அதேநேரத்தில், 01-01-2018 மற்றும் 30-09-2018 க்கு இடையில், SCSS வட்டி விகிதம் 8.3% ஆகக் குறைந்தது. இருப்பினும், அடுத்தடுத்த காலாண்டுகளுக்கு மேல்நோக்கி திருத்தப்பட்டது.
01-10-2018 மற்றும் 30-06-2019 க்கு இடையில் SCSS வட்டி விகிதம் 8.7% ஆக இருந்தது. 01-07-2019 மற்றும் 31-03-2020 க்கு இடையில், SCSS விகிதம் 8.6% ஆக இருந்தது.
2004 முதல் SCSS வட்டி விகிதம்
2022-23 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், அரசாங்கம் SCSS வட்டி விகிதத்தை 7.6% ஆக உயர்த்தியுள்ளது.
அதேபோல், நிலையான வைப்புத்தொகை மற்றும் சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால், மூத்த குடிமக்கள் வரவிருக்கும் காலாண்டுகளில் SCSS இல் படிப்படியாக மேல்நோக்கித் திருத்தம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். இருப்பினும், திடீரென்று பெரிய ஜம்ப் எதிர்பார்க்க வேண்டாம்.
நீங்கள் SCSS இல் முதலீடு செய்ய வேண்டுமா?
SCSS என்பது மூத்த குடிமக்களுக்கான முதலீட்டுத் திட்டமாகும். தற்போதைய வட்டி விகிதம் 7.6% குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும், பரஸ்பர நிதிகள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் பெறக்கூடிய அதிக வருமானத்துடன் ஒப்பிடுகையில், SCSS மூத்த குடிமக்கள் வைப்பாளர்களுக்கு மன அமைதியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.