Senior Citizen Savings Scheme (SCSS) interest rate: மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மற்றும் இதர சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களின் காலாண்டு மதிப்பாய்வு நடப்பு மாத இறுதிக்குள் நடைபெற உள்ளன.
2023-24 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான திருத்தப்பட்ட SCSS வட்டி விகிதம் செப்டம்பர் 30க்குள் அறிவிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் SCSS வட்டி விகிதத்தில் மேலும் அதிகரிப்பு எதிர்பார்க்கும் நிலையில், இந்த முறை அது நடக்க வாய்ப்பில்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான SCSS கணக்கு வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றாமல் 8.2% ஆக வைத்திருந்தது. இருப்பினும், முந்தைய இரண்டு காலாண்டுகளில் இது மேல்நோக்கி திருத்தப்பட்டது.
ஏப்ரல்-ஜூன் மாதங்களில், SCSS வட்டி விகிதம் 8% லிருந்து 8.2% ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில், 8.2% வட்டி விகிதத்தில், மூத்த குடிமக்களுக்கான சிறந்த நிலையான வருமான விருப்பங்களில் ஒன்றாக SCSS வருகிறது.
இந்த வட்டி விகிதம் தற்போது பெரும்பாலான முன்னணி வங்கிகள் வழங்கும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை விட சிறப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“