டிசிபி வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட்
7-45 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 3.75 சதவீதமும், 46-90 நாள்களுக்கான டெபாசிட்டுக்கு 4 சதவீதமும், 91 முதல் 6 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 4.75 சதவீதமும், 6-12 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.25 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
தொடர்ந்து, 12-15 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.25 சதவீதமும், 18 மாதங்கள் முதல் 700 நாள்களுக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 சதவீதமும் வழங்குகிறது.
மேலும் 36 மாதங்கள் முதல் 120 மாதங்களுக்கு உள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள்
7 நாள்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும் சேமிப்பு கணக்குக்கு 2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான வரையிலான டெபாசிட்டுக்கு 5.25 மற்றும் 6.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“