வீட்டு கடன் வங்கி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு கிட்டத்தட்ட 8% வட்டியை வழங்குகிறது.
இந்தியாவில் வீட்டுவசதி நிதி வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சியும் ஒன்றாக இருந்தாலும், வழக்கமான மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத் திட்டத்தையும் வழங்குகிறது.
2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள்
55 மாதங்கள்: வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு வருமானத் திட்டத்தின் கீழ் 7.45% வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 7.95% வட்டி கிடைக்கும்.
56-120 மாதங்கள்: வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு வருமான திட்டத்தின் கீழ் 7.19% வட்டி கிடைக்கும். தொடர்ந்து, 56-60 மாத கால வைப்புகளுக்கு, மூத்த குடிமக்கள் 7.69% வட்டி பெறலாம்.
வருடாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் 61-120 மாத டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்கள் 7.94% வட்டியைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“